லண்டன் பயங்கரவாத தாக்குதல் - பேராபத்திலிருந்து தப்பிய இலங்கையர்கள்!

NEWS
0

லண்டனில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்காக வந்த நபர்கள் போலி மனித வெடி குண்டுடனான ஜெகட் அணிந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நகரத்தின் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள இலங்கை ஊடகவியலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
லண்டனில் இடம்பெறும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தால் இலங்கையர்கள் பலருக்கு பாரிய பாதுகாப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top