இஸ்லாமிய வணக்கஸ்தலங்களை விடுதிகளின், ஹோட்டல்களின் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என தான்அஸாத் சாலி உள்ளிட்டவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வதாக பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
நேற்று முன்தினம் மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
பொதுபல சேனாவை உருவாக்கியதாக இவர்கள் கூறிய நோர்வே உள்ளிட்டவர்களிடம் முஸ்லிம்களுக்கு நீதி கேட்டுபோன விடயம் தொடர்பில் நேற்றையை தினம் பாராளுமன்ற உறுப்பினர் டீ வி சானக்க வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் நான் அந்த விடயத்தை மீண்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவவில்லை.
அதே நேரம் இஸ்லாமியர்கள் என்ற வகையில் தெவடகஹா பள்ளிவாயலில் இடம்பெற்ற அந்த சந்திப்பு தொடர்பில்எனக்கி உடன்பாடு இல்லை என்பதை ஊடக சக்கரவர்த்தி அஸாத் சாலிக்கு உள்ளிட்டவர்களுக்கு நான்சொல்லிவைக்க விரும்புகிறேன்.
முஸ்லிம்களாகிய எமது உதவி தேடல்கள் ,முயற்சிகள் என்பன இறைவன் அனுமதித்துள்ள பிரகாரமே அமையவேண்டும். அப்போது தான் இறைவனின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். மாறாக அல்லாஹ் அனுமதிக்காத பிரகாரம் எமது முயற்சிகளை செய்யும் போது உதவுபவனின் உதவிக்கு பகரமாக சாபமே மக்களை வந்து சேரும்.
குறிப்பாக இந்த சந்திப்புக்கு வந்திருந்த சில தூதுவர்கள் எமது சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஆடைகளில் அங்கு பிரசன்னமாகியிருந்த (அவர்களில் உடைகளில் எமக்கு குறைகாண முடியாது. அது அவர்களின் கலாசாரம். அவர்களின் சுதந்திரம் ) போட்டோக்களை சில சகோதரர்கள் சமூக வலைகளில் பதிவிட்டுள்ளமையை காணக்கிடைத்தது. இது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். பள்ளிவாயலில் இப்படியான ஒரு நிகழ்வை நடத்துவதால் ஒரு போதும் இறைவனின் அருளை பெற முடியாது.
இறைவன் அனுமதிக்காத மற்றும் விரும்பாத ஒரு செயலை பள்ளிவாயலில் செய்தமையால் பள்ளிவாயலின் புனிதம் தான் கெட்டுள்ளது. முதலில் அசாத்சாலி தூய இஸ்லாத்தை கற்க வேண்டும். அண்மையில் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபரின் மனைவி மிகவும் கண்ணியமான முறையில் ஆடை அணிந்தே சென்றிருந்தார்.
குறிப்பாக இந்த விடயத்தை பள்ளிவாயலுக்குள் அரைகுறை ஆடை அணிந்தவர்களை அழைத்து வந்த அசாத் சாலியும் அரைகுறை ஆடை அணிந்து வந்தவர்களும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.
இது போன்ற சந்திப்புக்கள் பள்ளிவாயலுக்கு உள்ளே நடப்பதை நாம் வரலாற்றில் கண்டதில்லை.அப்படியே அஸாத் சாலிக்கு இதுபோன்ற சந்திப்புக்களை நடத்தவேண்டிய தேவை ஒன்று இருந்தால் அதனை ஹோட்டல்ஒன்றிலோ அல்லது வேறு ஒரு தனி இடத்திலோ நடத்தியிருக்கலாம் அதனை விடுத்து பள்ளிவால் ஒன்றிற்குள்இஸ்லாம் அனுமதிக்காத ஆடைகளுடன் பெண்களை கூட்டிவந்து கலந்துரையாடல் நடத்தியுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதுபோன்ற விடயங்களில் அஸாத் சாலி போன்றவர்கள் இன்னும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனதான் கேட்டுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
Post a Comment