அட்டனிலிருந்து கொழும்புக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்

NEWS
0


(க.கிஷாந்தன்)

அட்டன் டிப்போவினால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய 10 பஸ்களில் இரண்டாவது பஸ் 11.06.2017 அன்று இரவு 7.20 மணியளவில் புதிய சேவையாக கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டது.

அட்டன் பிரதேச மக்களின் நலன் கருதி 10 பஸ்கள் 3 கோடி ரூபா நிதியினை செலுத்தி மீதிப்பணத்தினை தவணை அடிப்படையில் வழங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 10 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இந்த பஸ்களில் இரண்டாவது பஸ்ஸே 11.06.2017 அன்று கொழும்பு நோக்கி அட்டன் பிரதேச அட்டன்பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகல சூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பஸ் கொழும்பில் இருந்து மீண்டும் அட்டன் நோக்கி அதிகாலை 3.20 க்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுக்கு அட்டன் டிப்போவின் அதிகாரி அநுர தொடந்தென்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top