Top News

டிரம்பின் உத்தரவிற்கு தொடரும் தடை!!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின், புதிய பயண தடை தொடர்பில்  மேன்முறையீட்டு  மனுவை  நிராகரித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்குள் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு டிரம்ப் தடை விதித்திருந்தார்.

எனினும் குறித்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்நாட்டு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, எந்த மதத்தினருக்கும் தடை விதிக்க அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டி மேன்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post