பொதுபல சேனா அமைப்பினை உருவாக்கியது நோர்வே தான் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிப்படையாகவே கூறியிருக்கும் நிலையில் நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களிடம் இலங்கை முஸ்லிம் பிரச்சினைகளை முறையிடுவது வேடிக்கையான விடயம் எனவும் அஸாத் சாலி போன்ற தரகர்கள் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டீ வீ சானக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
நேற்றையை தினம் கொழும்பு தெவடகஹா பள்ளிவாயலில் ஐரோப்பிய யூனியன்இ நோர்வே உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் சிவில் சமூகம் சந்தித்து முறையிட்டதாக முஸ்லிம் நண்பர்கள் சிலர் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
சிவில் சமூகங்கள் தூக்கிச் சுமந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும் அஸாத் சாலியின் நெருங்கிய நண்பருமான ராஜித சேனாரத்ன பொதுபல சேனா அமைப்பு நோர்வே நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டதாக பல தடவைகள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அழுத்த கொடுக்குமாறு நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனிடம் கோரியுள்ளது வேடிக்கையிலும் வேடிக்கையான விடயமாகும்.
நோர்வேயிடம் போய் முஸ்லிம்களின் பிரச்சினையை முறையிடுவது ஓநாய் தொடர்பில் நரியிடம் முறையிட்ட கதையாகவே அமைந்துள்ளது இது விடயமாக நாம் அறிந்துவைத்துள்ள போது உலகத்தில் உள்ள எல்லா விடயங்களையும் அறிந்துவைத்துள்ள அஸாத் சாலி போன்றவர்கள் இதனை அறிந்துவைத்திருக்கமாட்டார்கள் என எவராலும் கூறமுடியது.
அரபு நாட்டு தூதுவர்கள் மூலம் உதவிகளை பெற்று தான் செய்ததாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் அஸாத் சாலி போனவர்கள் முன்னின்று நடத்தியிள்ள இந்த சந்திப்பின் மூலம் ஐரோப்பிய தூதுவர்கள் ஊடாக அவருக்கு சுயலாபங்கள் ஏதும் பெற்றுக்கொள்ளும் நோக்கங்களோ அல்லது வேறு நல்லாட்சியார்களின் எதையோ சாதிக்கும் நோக்கம் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர்இ
ஏற்கனவே மஹிந்தவை இனவாதியாக சித்தரித்து உண்மையான இனவாதிகளின் சதிவலையில் முஸ்லிம்களை சிக்கவைத்த அசாத் சாலி போன்ற தரகர்களின் சுழ்ச்சிகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூகம் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் இனவாதிகளை விடவும் அஸாத் சாலி போன்ற தரகர்களே பயங்கரமானவர்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டீ வீ சானக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment