அடுப்பு எரிகிறது ஆனால் சட்டி தீயவில்லை என்பது போன்ற கதைதான் அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட கருத்து.
முஸ்லிம்களை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்பும் வகையில் திட்டமிட்ட சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதனை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கை யாகவே தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான வார்த்தை ஜாலங்கள் மூலமாக தொடர்ந்தும் அரசியல் தலைவராகத் திகழலாம் என்று நம்புவது அவரது இற்றைப்படுத்தப்படாத அரசியல் பார்வையினையே காட்டுகிறது.
1. தற்போதுள்ள நல்லாட்சி அரசினை கொண்டு வருவதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொண்ட பொது பல சேனாவை மஹிந்தவின் அரசாங்கம் அடக்கவில்லை என்பதே காரணமாகச் சித்தரிக்கப்பட்டது. தான் அப்போதைய அரசாங்கத்தில் நீதி
அமைச்சராக இருப்பதை யிட்டு வெட்கமடை வதாகவும் அன்று கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சராக இருப்பதை யிட்டு வெட்கமடை வதாகவும் அன்று கருத்து வெளியிட்டிருந்தார்.
2. அதே பொது பலசேனாதான் தற்போது அதே அட்டகாசத்தை நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுத்து வருகிறது. இதனை இந்த அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பும் திட்டமிட்ட நடவடிக்கையாக தான் பார்ப்பதாக அதே நபர் கருத்து வெளியிடுகிறார். இந்த அரசாங்கத்தின் அரச இயந்திரம் பொது பலசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாக இந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பார்க்கவில்லையா? அதற்காக தற்போது அமைச்சராக இருப்பதையிட்டு இவர் வெட்கப்படவில்லையா?
3. இன்று நாட்டில் ஆங்காங்கே இடம் பெறும் இனவாதச் செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு புள்ளிக்கு இட்டுச் செல்லும் என்ற பயம் கவ்வி விட்டதா? அதுவும் முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளின் பக்க விளைவாக அமைந்துவிடும் என்று எண்ணுகின்றாரா?
4. மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்தின் மூலமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தமுடியும் என்றால் அது தவறான திசை திருப்பலாகுமா..?
5. முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவராகத் திகழ்வதும் கண்டி மாவட்ட ஜ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதும் ஒரே நபராக இருப்பது இவ்வாறான முரண்பாடான குழப்பகரமான சூழலை உருவாக்கும் எனபதை அவ் வறிக்கையின் மூலம் இவர் சான்று பகர்கின்றாரா?
6. இரண்டு பிரதான கட்சிகளும் சில சிறுபான்மை கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரும்வரை கவிழ்வது என்பது சாத்தியத்தன்மை மிகவும் குறைந்தது என்பது இவர் அறியாததா? அல்லது இவ்வாறு பூச்சாண்டி காட்டி இந்த சமூகம் விழிப்படையக்கூடாது என்பதில் இவர் தெளிவாக உள்ளாரா?
7. இந்த அரசாங்கம் பதவியில் நீடிக்கும் காலமெல்லாம் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இவர் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்வாரா?
அன்பார்ந்த முஸ்லிம் சகோதர்களே !
அமைச்சரவையில் நீடிப்பதற்கு எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதற்கேற்ப அரசியல் மொழியை மாற்றவல்ல
பேர்வழிகளால் எமது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே பேருண்மையாகும்.
தற்பாேது இலங்கையில் முஸ்லிம்கள் முகம் கொடுப்பது தங்கள் உயிரையும் உடைமை களையும் பாதுகாத்துக் காெள்வதற்கான தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டம்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் உரிமைப் போராட்டத்திற்காக உருவாக்கப்பட்டதாகவே இதுவரை நம்பவைக்கப்பட்டது. இன்று முஸ்லிம்களின் இருப்பை நிறுவும் பணியினை முன்னெடுப்பதிலேயே பின்னடைவைச் சந்திக்கிறது.
Post a Comment