Top News

தீ பிடித்து எரிவது உன் சகோதரரின் உழைப்பு - வரலாற்றின் இழிச் சொல்.

அஸ்மி அப்துல் கபூர் தினமும் மூட்டப்படுகின்ற தீ யின் பின்னால் பேரினவாதம் மட்டும் இருக்கிறது என நம்புகின்ற முட்டாள்களாக வாழப் போகிறீரா? ஞானசாரவை ஒழித்து வைத்து போடும் நாடகம் எங்கு போய் முடியும் என யூகிக்க முடியாத அறிவிலி சமுகமாக நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம்? எமக்காக ஒலிக்கின்ற குரல்களும் எம்மை எரிக்கின்ற தீயும் ஓரே இடத்தில் இருந்துதான் இயக்கப்பாடடவதை நீ உணராத சோனகனா? நோன்பு காலத்தில் எம் மத உணர்வை மேலிட செய்யும் சூழ்ச்சியை தினம் ஒரு கடையை தீ மூட்ட, தன் இஸ்டத்துக்கு பொலீஸாரையும் அரச அதிகாரிகளையும் மிரட்ட, சட்டத்தை தன் கையில் எடுக்க,ஞானசார எனும் சிங்கள மக்களின் அங்கீகாரம் பெறாத மதகுருவால் மாத்திரம் செயற்படுத்த முடியும் என நினைக்கிறீரா? இன்னும் கடைகள் தீ பற்றினால் அது மின் ஒழுக்கு என்று கூவுகின்ற இந்த அரசின் சூழ்ச்சிகளுக்கு துனை போகும் எம் ஊடகவியலாளரும் பல கோடி ரூபா எரிந்து விட்டும் வாய் திறக்க முடியாத கிழடுபத்தியும் சொகுசை நம்பி அரசை துதிபாடும் எழுத்தாளர்களும் அரசை கவிழ்க்க சூழ்ச்சியென வாய் கூசாமல் அதிகாரத்தை வைத்திருக்கும் முஸ்லீம் தலைவர்களும் மகிந்த காரணம் என முழு அதிகாரத்தையும் கையில் வைத்து இனவாத்தை தடுக்காமல் அது தொடர்பில் பேச இயலாது மெளனியாக இருக்கும் சில சில்லறை அரசியல் வாதிகளும், நல்லாட்சியை உருவாக்க கஷ்டப்பட்டு விட்டோம் ஆனால் அது மிகப் பெரிய வரலாற்று தவறு என உணர்நதும் மாற்று கருத்தாளனிடம் மண்டியிட முடியாது என வாய் மூடி கிடக்கின்ற என் இளைஞனே!! கோடிக் கணக்கில் தனது உழைப்பால உயர்ந்த எம் வர்த்தகர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள் நாம் வாழுகின்ற எம் தேசத்தில் யாரோ ஒரு கலீமா சொன்னவன் அநாதரவாகிறான் அவனது குடு்ம்பம் நிம்மதி இழந்து, அவனை நம்பியவர்கள் அநாதரவாகும் சூழலில் எம் தலைவர்கள் குரங்கு வித்தை காட்டிக் கொண்டு நோன்பு திறக்கவும், அரசியலை வளக்கவும் வரப் போகிறார்கள்... உன் சகோதரன் அழிவுற்றிருக்கும் போது இன்னுமா எங்களை வைத்து அரசியல் செய்ய போகிறாயா? எனக் கேள் இன்றுடன் இவர்களின் நாடகங்கள் நிறைவு பெற வேண்டும், புகையை கூட மூடி மறைக்க முடியாத எம்மவர்கள் இந்த தீயின் சூத்திரத்தை அணைக்க முடியுமா? அவ்வாறு நீ எண்ணும் வரை உன்னை மூடர்களாக்குவது திண்ணம்.

Post a Comment

Previous Post Next Post