இறக்காமம் முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் நகர் மக்கள் இப்தார் நிகழ்வு

NEWS
1 minute read
0




(எம்.எம்.ஜபீர்)

இறக்காமம் முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் நகர் மக்கள் இறக்காமம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு முகைதீன் கிராமம மஸ்ஜிதுல் நபீலா றஸீட் பள்ளிவாசலில் இன்று  நடைபெற்ற இப்தார் நிகழ்வுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான  ரகுமத் மன்சூர் பிரதம விருந்துனரக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் அம்பாரை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெக் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் பைசால் இப்றாகீம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜெ.நஸ்ரூல் கரீம், இறக்காமம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.நிஸார், இறக்காமம் அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஏ.கே.அப்துல் ரவூப், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் மௌலவி யு.கே.ஜாவிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.ஜிப்ரி, எம்.எல்.முஸ்மில், என்.எம்.ஆஷீக், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இறக்காமம் நிலையப் பெறுப்பதிகாரி எம்.எச்.ஏ.ஜப்பார் உள்ளிட்ட பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top