சப்னாஸ் சறூக்
புதிய அரசியல் சீர்திருத்தம், சர்வஜன வாக்களிப்பின் பின்பு தான் நிறை வேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை ரீதியிலான நாடக்கத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு,நல்லாட்சியின் இயக்கத்தில் அன்மைக் காலங்களில் அரங்கேற்றி கொண்டிருக்கிறது. வெளிப்படையாக பார்த்துவிட்டு, ரா.சம்பந்தன் கோரும் சமஸ்டி ,வட கிழக்கு இணைப்பு உள்ளடங்களான புதிய அரசியல் சீர்திருத்தம் வாக்களிப்பில் தோற்று விடும் ,அதனால் அச் சீர்திருத்தம் அமுல் படுத்தப் படாது என நாம் நினைப்போமாயின் அது நாம் சூழ்ச்சிகள் புரியாது நல்லாட்சியை ஆடசிக்கு அமர்த்தியதை விட பன்மடங்கு முட்டாள் தனமாகும். இதன் பின்புலம் சற்று சிந்திக்க வேண்டியதே. கடந்த ஆட்சி மாற்றத்தின் பின் சம்பந்தனின் ஆளும் கட்சியுடனான நடவடிக்கையில் பாரிய மாற்றங்கள் தெரிகின்றது, அது கூட்டமைப்பில் உள்ள சில கட்சிகள் ஐ.நாவில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்க கூடாது என எதிர்த்தும் 'கடுமையான நிபந்தனைகளுடன் கால அவகாசம் வழங்கப்படலாம் 'எனக் கூறி ஆதரவு வழங்கியதில் மாத்திரம் அன்றி அதிலும் ஒரு படி மேலாக சென்று அண்மையில் நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவு நாளில் 'ரா.சம்பந்தன் எங்களுக்காகவோ அல்லது காணமல் போனவர்களுக்காகவோ அரசை சாடவில்லை' என்று சொல்லி தமிழ் மக்களே சம்பந்தன் இற்கு எதிராக குரல் எழுப்பும் அளவுக்கு தனது விசுவாசத்தை காட்டுவதில் இருந்து அவரின் போக்கின் தன்மை மேலும் தெளிவடைகிறது. இவ்வாறு தன் மக்களே தமக்கு எதிராக மாறும் வரை அமைதி காக்கும் அளவுக்கு சம்பந்தன் ஐயா ஒன்றும் முட்டாள் அல்ல.மாறாக இச் செயற்பாடுகள் அனைத்தின் மூலமாக சம்பந்தன் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதையோ ஒன்றை பெரிதாக எண்ணி காய் நகர்த்துவது உறுதியாக தெரிகிறது. இவ்வாறான காய் நகர்த்தலின் ஒரு அங்கம் தான் 'அரசியல் சீர்திருத்தத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு'. இதில் வென்றாலும் தோற்றாலும் ரா.சம்பந்தன் வெற்றி பெற்றவர் தான் . எவ்வாறு எனில் சர்வஜன வாக்கெடுப்பின் போது பிரதான கட்சிகளின் ஆதரவு உள்ளடங்களாக தமிழ் மக்களின் பங்கு பற்றுதல் ஊடாக சுமார் 15% தொடக்கம் 20% ஆதரவினைப் பெற்றாலும் அவருக்கு போதுமானது ,ஏனெனில் அந்த ஆதரவோடு நோர்வே இன் அனுசரனையை பெற்று ஐ.நா நோக்கி தன் நகர்வினை மேற்கொள்வார்.அங்கு நோர்வே,அமேரிக்கா,இந்தியா,பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு முன்னாள் இலங்கையில் ஒரு சுமார் 1/5 பங்கு குழு தமக்கான அதிகாரத்தினை கேட்டு நிற்கிறது என கூறுவதோடு கடந்த கால போர் குற்றங்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளக்கூடும். இறுதியில் ஏற்கனவே பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை சர்வதேச நாடுகளுக்கு அடிபனியும் துர்பாக்கிய நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.இந்த நிலையால் ரா.சம்பந்தன் அவர்கள் தன் வாழ் நாள் கணவான வட கிழக்கு இணைப்பு ,பொலிஸ் காணி சட்டம்,சமஸ்ட்டி ஆட்சி முறையென அனைத்தினையும் அடைந்திட வாய்ப்பு உள்ளது.இதற்கான நகர்வே இன்று அரங்கேறுகிறது. இப்படி சம்பந்தன் வெற்றி பெறுவதால் அதிகம் பாதிக்கப்பட போவது முஸ்லிம் சமூகமே அன்றி வேறில்லை,ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் மீள் குடியேற்றம் முதல் பல விடயங்களில்,முஸ்லிம் புறக்கணிப்பு போக்கினை கடைப்பிடித்தன் மூலம் இனி வரும் காலங்களிலும் அதே கோட்பாட்டினை அவர்கள் தொடர்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அத்தோடு மேலுள்ள விடயத்தினை வெறும் கற்பனையாக கொள்ளாது ,வெறும் 10% மக்கள் எந்த நம்பிக்கையில் தொடர்சியாக அதிகாரபகிர்வு தொடர்பாக பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போராடி வருகின்றார்கள் என சிந்திப்பதன் மூலம் கற்பனைக்கு அப்பால் உள்ள யதார்த்தம் விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.
Post a Comment