Top News

ஈராக் மொசூல் நகர் அல் நூரி பெரிய பள்ளிவாசலைச் சூழ்ந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்


ஐ.எஸ். பயங்கரவாதிகள் குழு  ஈராக் மொசூல் நகரில் இறுதி யுத்தம் ஒன்றுக்கு தயாராகும் வகையில் நகரின் அல் நூரி பெரிய பள்ளிவாசலைச் சூழவுள்ள வீதிகளை மூடி ஏற்பாடுகளை செய்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்திற்குள் இந்த பள்ளிவாசலை சூழ ஐ.எஸ். குழுவினர் நிலை கொண்டிருப்பதை காண முடிவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த பள்ளிவாசலிலேயே கடந்த 2014 ஜூலையில் ஐ.எஸ். முன்னாள் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி தோன்றி கிலாபத் ஒன்றை அறிவித்திருந்தார்.
இந்த பள்ளிவாசல் ஐ.எஸ். வசமானது தொடக்கம் அங்கு ஐ.எஸ். இன் கொடி பறந்து வருகிறது. எனினும், பள்ளிவாசல் வீழும் பட்சத்தில் ஈராக்கில் ஐ.எஸ். கோட்டையான மொசூலில் அந்த குழு முழுமையாக தோற்றுவிடும் என்று கருதப்படுகிறது.
அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களை வெளியேறும்படி அரச படை வானில் இருந்து துண்டு பிரசுரங்களை போட்டு எச்சரித்தபோதும் உக்கிர மோதல் நீடிப்பதால் மக்களுக்கு வெளியேற முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மொசூலின் ஐ.எஸ். எல்லைக்குள் மோசமான சூழலில் தொடர்ந்து சுமார் 200,000 சிவிலியன்கள் வாழ்ந்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Post a Comment

Previous Post Next Post