எமது நாட்டில் காற்றடிக்கின்ற பக்கம் சாய்கின்ற அரசியல்வாதிகள் நிறையவே உள்ளனர்.ஒரு தோணியில் பயணித்தாலும் அவர்களின் இன்னொரு கால் இன்னொரு தோணியில்தான் இருக்கும்.
அப்படியானவரா வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன என்று இப்போது சந்தேகம் எழுகின்றது..
மாகாண சபையின் ஆட்சி அன்று மஹிந்த தரப்பிடம் இருந்தபோது மஹிந்தவின் விசுவாசியாக இருந்தார்.பின்னர் மைத்திரி விசுவாசியாக மாறினார்;முதலமைச்சராகவும் ஆனார்.
அதனைத் தொடர்ந்து மஹிந்த அணியில் இருந்து மேலும் மூவரை மைத்திரி பக்கம் வளைத்துப் போட்டு அமைச்சர்களாக ஆக்குவதற்கு பின்னணியில் நின்று செயற்பட்டார்.
இருந்தும்,அவரது வீட்டுச் சுவரில் இப்போதும் மஹிந்தவின் புகைப்படம்தான் தொங்குகிறதாம்.தான் மஹிந்தவை எதிர்க்கவில்லை என்று கூறி டபிள் கேம் ஆடுகின்றார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள்.
மஹிந்த வென்றால் மஹிந்தவோடு; மைத்திரி வென்றால் மைத்திரியோடு.பிழைக்கத் தெரிந்த பக்கி.
[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]
Post a Comment