Top News

நெதர்லாந்தில் சுனாமி! கடலினுள் இழுத்து செல்லப்பட்ட பொருட்கள்:



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
நெதர்லாந்தில் உள்ள கடற்கரையில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதால், அங்கிருந்த சிறிய ரக படகுகள் மற்றும் பொருட்கள் போன்றவை கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நெதர்லாந்தின் Amsterdam தலைநகரில் உள்ள Zandvoort பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் கடந்த திங்கள் கிழமை வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பெருமளவில் இருந்தனர்.

அப்போது காலை உள்ளூர் நேரப்படி 5.45 மணி அளவில் திடீரென்று கடலில் இருந்து அலைகள் வேகமாக வரத் தொடங்கியது. அதன் பின் கடலில் இருந்து எழும்பிய அலைகள் சுனாமி அலைகள் போல் எழும்பி வந்துள்ளது.

இதனால் கடற்கரையில் இருந்த படகுகள், நாற்காலிகள் மற்றும் பொருட்கள் போன்றவை கடலுனுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த அலைகள் சுமார் 7-அடி வரை எழும்பியதாகவும், ஆனால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு விடுதியில் இருந்த நபர் ஒருவர் பால்கனியில் இருந்த படி இது குறித்த வீடியோவை எடுத்துள்ளார். சுமார் 5-நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் அவர் சுனாமி, சுனாமி என்று கத்துகிறார்.

அதன் பின் எழும்பிய அலைகள் வந்த வேகத்தில் கடலுனுள் சென்றுவிட்டன. இது ஒரு சிறிய அளவிலான சுனாமி அலைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து sailing கிளப்பிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள katwijk கடற்கரையிலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் எழும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post