அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
தங்கள் நாட்டின் மீது மற்ற வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமான் நாட்டு வழியாக மாற்று வழியில் தாங்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டுள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சிறிய கப்பல்களில் கத்தாருக்கு கொண்டுவரப்படும்
உள்நாட்டு தேவைகளுக்கு இறக்குமதி பொருட்களை சார்ந்துள்ள கத்தார்
27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க சிறிய வளைகுடா நாடான கத்தார், தனது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை சமாளிக்க நிலம் மற்றும் கடல் வழியாக வரும் இறக்குமதி பொருட்களை சார்ந்து உள்ளது.
27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க சிறிய வளைகுடா நாடான கத்தார், தனது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை சமாளிக்க நிலம் மற்றும் கடல் வழியாக வரும் இறக்குமதி பொருட்களை சார்ந்து உள்ளது.
கடந்த ஜூன் 5- ஆம் தேதியன்று, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைனை சேர்ந்த கடல்சார் அதிகாரிகள் கத்தார் நாட்டு கொடியுடன் வரும் கப்பல்களுக்கு அனுமதி மறுத்து தங்களின் துறைமுகங்களை மூடிவிட்டதாக கூறினர்.
துபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி மற்றும் ஃபுஜைரா துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து வரும் மற்றும் கத்தாருக்கு செல்லும் கப்பல்களை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனமான எம்வானி, கத்தார் வரும் மற்றும் போகும் கப்பல்கள், ஐக்கிய அரபு எமிரேட்டுகளை தவிர்த்து ஓமான் வழியாக தற்போது செல்லவுள்ளதாக அறிவித்தது.