ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ துப்பாக்கி சூடு இடம் பெற்ற இடம்: -
www.youtube.com/watch?v=75IG5MgL1TA
கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதி காலை 5.30 மணியளவில் தொழில் நிமிர்த்தம் கட்டுமான வேலைகளுக்காக மண் ஏற்றி வந்த உழவு இயந்திரமானது பொலிசாரின் தடையினை மீறி பயணித்ததினால் மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து வாழைச்சேனை பொலிசார் இயந்திரத்தின் டயர்களுக்கு துப்பாக்கி சூடு நடாத்தி மண் நிரப்பட்ட உழவு இயந்திரத்தினை மடக்கிப்பிடித்தனர்.
குறித்த உழவு இயந்திரமானது ஓட்டமவடி ஜும்மா பள்ளிவாயலுக்கு அருகாமையில் வைத்து வழைச்சேனை பொலிசாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்ட வேலையில் மண் ஏற்றி செல்வதற்காகன சட்டரீதியான ஆவணங்களை வைத்திருக்காததே பொலிசாரின் உத்தரவினை மீறி பயணித்தமைகான காரணம் என வழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
மேலும் அதி காலை நேரத்தில் துப்பாக்கு சூடு இடம் பெற்ற மீராவோடை பிரதேசமனது சன நடமாட்டம்மிக்க பிரதேசமகவும் ,ஜும்மாபள்ளி வாயலினை அண்டிய பிரதேசமகவும், நோன்புகாலமகவும் இருந்ததினால் சரமாரியான துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்டு அப்பிரதேச மக்கள் அல்லோலப்பட்டு வெளியில், வரத்தொடங்கினார்கள். இருந்தும் துரதிஸ்ட்டவசமாக உழவு இயந்திரத்தின் ஓட்டுனருக்கோ, பொதுமக்களுக்கோ துப்பாக்கி சூட்டினால் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை முக்கிய விடயமாகும்.
அத்தோடு மேலதீக பொலிசார் இஸ்தளத்திற்கு வரவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திமானது சட்ட நடவிடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொஈஸ் நிலையத்திற்கு வேறொரு இயந்திரத்தின் உதவியின் மூலம் கொண்டு செல்லப்பட்டதுடன், துப்பக்கி சூடு இடம் பெற்ற இடம் மற்றும் அதற்கு பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகள் சம்பந்தமன காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.