கடந்த 5வருட காலமாக பிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலையானது பல மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.
சுமார் 150 மாணவ மாணவிகள் மார்க்கக் கல்வியை கற்றுவருகின்றனர். அவர்களின் நலன் கருதி அல்குர்ஆன் பைகள் மற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் இன்னும் பல கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அல்குர்ஆன் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் கலாசாலையின் தலைவர் மௌலவி நளீம் ஸலாமி அவர்களின் தீவிர முயற்சியினால் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் வறிய மற்றும் கணவனை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் ஹஜ் காலங்களில் குர்பானி இறைச்சிகளையும் தனவந்தர்களின் உதவியைக் கொண்டு வழங்கி வருகின்றனர்.
அதனடிப்படையில் பிறைந்துரைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் இம்றான், றிஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தாரின் பங்களிப்பினால் அவர்களின் சொந்த பணத்திலிருந்து 150 மாணவ மாணவிகளுக்கான அல்குர்ஆன் பைகள், அடையாள அட்டைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
கலாசாலையின் தலைவர் ஏ.யு.எம். நளீம் (ஸலாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸம்மில், ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர் முத்துவாப்பா மற்றும் காலாசாலையின் முஅல்லிம்களாக சறூக் ஹாபிஸ், நிஜாஸ், அஸ்பாக் ஆகியோரும் பெற்றோர்கள் மற்றும் பிரதேச நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.