அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர்.
இதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற பாராளுமன்றத்தில் வைத்தே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக 06.06.2017ம் திகதி குற்றம் சாட்டி தனது பேச்சை அமைத்திருந்தார். அவரது குறித்த தின பேச்சானது வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு, வடக்கு மக்களுக்கு அமைச்சர் என்ன செய்கிறார் என்ற வினாவுக்கு விடையாக அமைகிறது.
“இங்கிருக்கின்ற அண்ணன் சம்பந்தன்,சுமந்திரன் அவர்களிடத்திலே நான் அன்பாக வேண்டிக்கொள்வது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்களின் பின் மீள் குடியேறச் சென்ற போது உங்கள் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகாவும் ஒரு சிலர் மறைமுகமாகவும் தடுக்கின்றனர். முல்லைதீவிலே காணியை பெற்றுக்கொடுக்க தடை செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அம் மக்களை மீள் குடியேற்ற ஒரு மீள் குடியேற்ற செயலனியை அமைத்து அவற்றுக்கு பணத்தை ஒதுக்கிய போது உங்கள் கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து முடியாத என முடிவு எடுத்ததாக அறிய முடிந்தது. இது தொடர்பில் நான் உங்களிடம் ஒரு கடிதமும் தந்தேன்.
அது குறித்து மிகவும் திறந்த மனோதோடு உள்ளேன். அவர்கள் அனைவரையும் மீள் குடியேற்ற உங்களுக்குள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற பலம் வடக்கு மாகாண சபையை ஆளுகின்ற பலம் ஆகியவற்றை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் செய்த மகா தவறுக்கு பரி காரம் தேடுங்கள்.”
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருக்கின்றனர் என்ற விடயத்தை பகிரங்கமாக கூறுவதன் மூலம் அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலத்த அவமானத்தை தோற்றுவிப்பதோடு அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களிடையே இன்னும் அதிகமான எதிர்ப்பை சம்பாதிக்கச் செய்யும். இப்படி காரசாரமான பேச்சை அமைக்கும் போது இதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் முஸ்லிம்கள் பக்கத்தில் இருக்கின்ற நியாயத்தையும் நாட்டுக்கு பறை சாற்றும்.
அத்தோடு இவ்விடயத்தில் இவர்களின் முட்டுக்கட்டைகளை அறிந்து அமைச்சர் றிஷாத் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதற்கு அவ்வர்கள் பதில் வழங்காத போது அவர்களை நோக்கி பாராளுமன்றத்திலே கேள்வி எழுப்புகிறார். முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு யாரையும் எதிர்க்க தான் தயார் என்ற மனோ நிலையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதொடு அவர்களை மீள் குடியேற்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி நகர்வதையும் எடுத்து காட்டுகிறது.
அமைச்சர் ஹக்கீம் இப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினரை கண்டித்த ஒரு பேச்சை யாராலும் காட்ட முடியுமா? அதற்கு மாற்றமாக அமைச்சர் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு அழகிய உறைவை பேணியே வருகிறார். இதனை நான் ஆதரங்களோடு நிறுவ வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். இந்த உறவை பயன்படுத்தி இவ்வாறு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களின் தடைகளை தகர்த்து எறியலாமே? அமைச்சர் ஹக்கீம் அரசின் உயர் மட்டத்தோடும் அதிக தொடர்பில் தான் உள்ளார்.
இருந்தும் அவர் அதன் மூலம் சாதித்ததென்ன என்ற வினாவுக்கான விடையே இதிலும் கிடைக்கின்றது. குறித்த நபர்களுடன் முரண்படும் விடயங்களில் அமைதியாக இருப்பதன் காரணமாகத் தான் இவர்களுக்கு இடையிலான உறைவு நீடிக்கின்றது என்று கூறினாலும் தவறில்லை. அமைச்சர் றிஷாதும் அமைச்சர் ஹக்கீமைப் போன்ற வழி முறைகளை கையாண்டு யாருடனும் எச் சந்தர்ப்பத்திலும் முரண்படாது சென்றால் அவரது தற்போதைய உயரத்தை காட்டிலும் உச்சத்தை தொட்டிருப்பார்.
இலங்கை முஸ்லிம் மக்கள் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அமைச்சர் ஹக்கீமை எமது முஸ்லிம்கள் ஆதரிக்கும் வரை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. அத்தோடு எமது முஸ்லிம் சமூகத்துக்காக தனது உயிரை துச்சமாக மதித்து போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாதின் கைகளை பலப்படுத்துவதே இப்போதைக்கு சிறந்ததாகும். இது போன்று நான்கு பேச்சுக்களை அமைத்தால் எதிரிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி விடுவார்கள்.
அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
Post a Comment