அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்தியா ஐதராபாத் அருகே உள்ள பொராபந்தா என்னும் இடத்தில் இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து ஒரு வீதியில் திரளாக கலந்துகொண்டு சஹர் உணவு அருந்தி வருகின்றனர்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானில் அதிகாலை பாங்கு அழைப்புக்கு முன்பு உணவு அருந்துவது சஹர் உணவு என்று அழைக்கப்படும். அதன் பிறகு மாலை மஃரிப் பாங்கு அழைப்பு வரை உண்ணாமல் பருகாமல் இருப்பார்கள்.
இந்நிலையில் ஐதராபாத் பொராபந்தா என்னும் இடத்தில் சஹர் உணவை அனைத்து சமூக மக்களும் இணைந்து உண்ண விரும்பினர். இதற்காக ஒரு வீதியில் சுமார் 300 பேர் கூடி தினமும் சஹர் உணவு அருந்தி வருகின்றனர். மி
இதற்காக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வீடுகளில் அவரவர்கள் விரும்பு உணவுகள் சமைக்கப்படும். குறிப்பாக அசைவ உணவுகளே முக்கியத்துவம் வகிக்கும் . மேலும் அருகில் உள்ள மசூதிகளிலிருந்தும் உணவுகள் கொண்டுவரப்படும்.
இறுதியில் சஹர் நேரத்தில் அனைத்து சமூக மக்களும் இணைந்து சஹர் உணவு உண்ணுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மேயர் ஃபசிஹுத்தீன் தெர்விக்கையில் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் இதற்காக என் பள்ளி தோழர் நவீன் ராவ் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். என்று தெரிவித்தார்.
Post a Comment