கடந்த சில வாரங்களாக இனவாத ரீதியிலான கருத்துக்கள் மூலமாகவும், வன்முறை சம்பவங்கள் மூலமாகவும், தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார். என்ற குற்றச்சாட்டில் நான்கு தனி பொலிஸ் குழுக்களை அமைத்து ஞானசார தேரரை கைது செய்யப்போவதாகவும் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஞானசார தேரரை பொலிசார் இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் பின்னனியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஞானசாரவுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் சிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இதுவரை ஞானசார கைது செய்யப்படாமையானது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீதான சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
தலைமறைவாகியிருக்கும் ஞானசார ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்துச் சொல்லும் அதேவேளை, ஞானசாரவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அவர் நீதி மன்றத்திற்கு சமூகம் தராத போதிலும் அவருக்காக வழக்காடும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் ஞானசார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை நான்கு பொலிஸ் தனிப்படையினாரால் இதுவரை கண்டுபிடித்து கைது செய்ய முடியாததுதான் வேடிக்கையாகவும் நல்லாட்சியின் இயலாமையையும் குறிக்கின்றது.
மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க நல்லாட்சியின் கூட்டு சதிகாரர்களினால் கொண்டுவரப்பட்ட ஞானசார கடந்த ஆட்சியின் போது செய்த அட்டூளியங்களுக்கு இதுவரையிலும் அவருக்கு எதிராக எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது, ஞானசாரவை அரச மரியாதையுடன் சுதந்திரமாக உலாவ விட்டு வேண்டிய இடத்தில் சிலை வைக்க அரசாங்கம் உதவியிருப்பதும், மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் விரோத போக்கிற்கும் ஞானசாரவை இயக்கியது யார்? என்ற கேள்விக்கு தற்போது விடை தேடித்தந்திருக்கிறது.
மரிச்சுக்கட்டி தொடர்பான ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலும், இறக்காம புத்தர் சிலை விவகாரம் போன்ற ஏனைய சர்ச்சைகளை மூடி மறைக்க தனது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு தொடராக பள்ளிவாயல் மீதும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும், தாக்குதல் நடத்தச் செய்து கைது செய்யப்போவதாக நாடகமாடும் இவ்வரசாங்கம் நடைபெற்ற அசாம்பாவிதங்களுக்கு பொறுப்பான ஞானசார மீதான குற்றச்சாட்டிற்கு அரசு இன்றுவரை மௌனம் காப்பதும், ஒரு மணி நேரத்தில் கலவரவத்தை ஏற்படுத்துவேன் என தலைமறைவாகியிருக்கும் ஞானசார சவால் விடுப்பதும், உத்தியோக பூர்வமற்ற பொலிஸ் படையணிக்கு சிங்கள இளைஞர்களை ஞானசார அழைத்துள்ளமையானதும், அவருடைய செயல்பாடுகள் அனைத்துக்கும், அரச அங்கீகாரம் உள்ளது என்பதை சந்தேகமின்றி நிரூபிக்கின்றது.
அவ்வாறில்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்ட, அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளாக இருக்குமாயின், உண்மையில் ஞானசாரவை கைது செய்வது அரசுக்கு சவாலானதொரு காரியமாக இருந்தால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஞானசார (பயங்கரவாதி) என அரசாங்கம் பிரகடனம் செய்ய முன்வர வேண்டும்.
இக்கட்டளையை அரசு உடனடியாக பிறப்பித்தால் மாத்திரமே புற்றுக்குள் ஒழிந்திருக்கும் "சாரயை" வெளியில் கொண்டுவர முடியும், அதனூடாக ஞானசாரவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பதுடன் இலகுவாக அவரை கைது செய்யவும்,நாய்க் கூண்டில் அடைக்கவும் அவருக்கெதிரான நீதிவிசாரணையை மேற்கொள்ளவும் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்கவும் வசதியாக இருக்கும். அவ்வாறு அரசாங்கம் ஞானசாரவை பயங்கரவாதியென அறிவிக்க முன்வராவிட்டால் நல்லாட்சி அரசே ஞானசாரவை கொண்டுவந்தது, அசம்பாவிதங்களை செய்யத் தூண்டியது இப்போது கைது செய்ய விடாமல் பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Post a Comment