முஹம்மட் இப்றாஹீம்
கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கருத்துக்களை கிண்டல் செய்தவர்கள் ஆயிரம், அதற்கொரு காரணமும் இருக்கிறது மஹிந்த மீது கொண்ட அதீத கோபம் காரணமாகவே அப்படி செய்தனர் என்றாலும் அந்த காலத்தில் அதனை நம்ப முடியில்லை ஆனால் இன்று அவைகள் பலித்துப்போயின.
பொதுபலவுக்கு வெளிநாட்டு சக்திகளின் பங்களிப்பு, ஆட்சியை மாற்றியது அமெரிக்கா, மஹிந்தவுக்கும் பொதுபலவுக்கும் தொடர்பில்லை, ரணிலின் ஆட்சி மிகவும் மோசமானது என பல கருத்துக்களை அதாஉல்லா அன்று சொன்னார்.
அதாஉல்லாவை பொறுத்தவரை வேறு ஒருவரின் அஜென்தாவிற்கு கட்டுப்பட்டு நடப்பவர் அல்ல, வெளிநாட்டு சக்திகளின் தொடர்புகளும் இல்லை, சாதாரண மனிதனாக இருந்து அதிகாரத்திற்குள் வந்தவர் அத்தோடு அஸ்ரபின் நேரடி பாசறை.இவைகள் அனைத்தும் கருத்தின் முதிர்வை காட்டும். அப்படி எதிர்கால அரசியல் குறித்து எதிர்வு கூறிய அனைத்தும் சரியாகிவிட்டது. இன்று அதாஉல்லாவை போற்றுகின்றனர்.
ஒரு தலைவன் எதிர்கால நடப்புகுறித்து நன்கு தீர்மானிப்பவனாக இருக்க வேண்டும், அத்தோடு நிலைமாறாத ஒருவனாக இருக்கவேண்டும் அவைகள் அதாஉல்லாவிடம் அதிகம் இருக்கிறது.
Post a Comment