மஹியங்கனையில் நடந்தது என்ன ?

NEWS
0


(க.கிஷாந்தன்)

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன்று 09.06.2017 அன்று இரவு தீக்கிரையாகியுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை,

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top