Top News

யாழ்ப்பாணத்திற்கு கடத்தவிருந்த முதிரை மரக்குற்றிகள் மீட்பு



பாறுக் ஷிஹான்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கூலர் வானத்தில் கடத்திய இருவரை கிளிநொச்சி பளை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கோண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம்(6) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் வெலிபன்னவின் உடனடி முறியடிப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்திய வாகனம் பளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இதன் போது குறித்த வாகனத்தை பின்தொடர்ந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிளையும் மோதி தப்பி செல்ல கடத்தல்காரர்கள் முயன்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரினால் எச்சரிக்கை வேட்டுக்கள் வைக்கப்பட்டு குறித்த மரக்கடத்தல் கூலர் வாகனம் கைப்பற்றப்பட்டது.

அத்துடன்   இவ்வாகனத்தில் மரங்களை கடத்தி சென்ற இருவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சுமார் 20 க்கும் அதிகமான பல இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட மரக்குத்திகள் குறித்த கூலர் வாகனத்தில் இருந்து உடனடி முறியடிப்பு அதிகாரிகளான பொலிஸ் பரிசோதகர் ரி.வி.எஸ் கல்யாணதுங்க மற்றும் உப பொலிஸ் பரீசோதகர் கருணாரத்னம் ஜசீந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீட்டுள்ளனர்.


தற்போது குறித்த வாகனம் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post