Top News

பொலி­ஸா­ருக்கு முடி­யா­விடின் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கலாம் - ஜனாதிபதி


எஸ்.என்.எம்.சுஹைல்
நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸா­ரினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­விடின் இவ்­வி­வ­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கலாம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

  ஆளும் கட்சி குழு கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற ஆளும்­கட்சி குழு அறையில் இடம்­பெற்­றது. இதன்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தற்­போது நாட்டில் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

ஆளும் கட்சி குழுக்­கூட்டம் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதன்­போது, இன்­றைய தினம் பாரா­ளு­மன்றில் இடம்­பெ­ற­வி­ருக்கும் அனர்த்­தங்கள் குறித்த விவாதம் குறித்து ஆரா­யப்­பட்­டது. இந்த கூட்­டத்தின் முடிவில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் எழுந்து, "இங்கு இடம்­பெறும் கூட்­டத்­திற்கும் நான் முன்­வைக்கும் கருத்­துக்கும் வித்­தி­யாசம் இருக்­கலாம். ஆனால், இயற்கை அனர்த்­தத்­தைப்­போன்று இன்று நாட்டில் இன­வா­தத்தால் ஏற்­படும் பாதிப்­புகள் அதி­க­மாக அமையக் கூடும். எனவே இவ்­வி­டயம் குறித்து ஜனா­தி­பதி கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். 

குறிப்­பாக நாளுக்கு நாள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்தே செல்­கின்­றன. கடந்த ஐந்து நாட்­களில் நான்கு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மஹ­ர­கம பகு­தியில் மூன்று கடைகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­தோடு திரு­கோ­ண­ம­லையில் பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு பெற்றோல் குண்டு வீசப்­பட்­டுள்­ளது.

இது அர­சாங்­கத்தை கவிழ்க்க எடுக்­கப்­பட்­டி­ருக்கும் முயற்­சியின் ஒரு வடி­வ­மாகும். இது குறித்து ஜனா­தி­பதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­வித்தார்.

இதன்­போது, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மற்றும் ஏ.ஆர்.இஷாக் எம்.பி ஆகியோர் இவ்­வி­வ­காரம் குறித்­த­தான சீ.சீ.ரி.வி. ஆதாரம் இருப்­ப­தா­கவும் பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­கா­திப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி, இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நாம் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­தி­ருக்­கிறோம்.

இவர்கள் இனவாதத்திற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொலிஸாரால் இவ்விடயத்தை கையாள முடியவில்லை எனில் இராணுவத்திற்கு இதனை கையாளுமாறு ஒப்படைக்கலாம் என்றார். 

Post a Comment

Previous Post Next Post