ஓட்டமாவட்டி அஹமட் இர்ஷாட்
தகவல் இலண்டலிருந்து அப்துர் ரஷாக்.
நமக்குச் சொந்தமான பள்ளிகளில் கூட நமக்கு இடம் மறுக்கப்படலாம்---
நமக்குச் சொந்தமான பள்ளிகள் கூட சகோதர இனங்களால் உடைக்கப்படலாம்
ஆனால், அடைக்கப்படாத வாசல்களாக வெள்ளையர்களின் தேவாலயங்கள் காட்சிதருகின்றன ஏறாவூரினை பிறப்பிடமாகவும் இலண்டனினை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அப்துர் ரஷாக் கூறுகின்றார்.
எங்கோ இருக்கின்ற வெள்ளையர்கள்,, அவர்கள் புனிதமாக மதிக்கின்ற, அவர்களின் தேவாலயங்களில், எங்களுடைய பள்ளிகள் போல், நாங்களும், எங்களுடைய குழந்தைகளும், அங்குமிங்குமாக சிதறி வாழ்கின்ற எங்கள் அன்புச் சகோதரர்களும், ஒன்று கூடி நோன்பு திறந்து, தொழுது, அளவளாவி, எமது கலாச்சார விழுமியங்களை இலண்டன் மில்டன் கீன்ஸ் மாநகரில் தக்க வைத்துக் கொள்வதற்கு இலண்டனில் உள்ள வெள்ளையர்கள், முஸ்லிம்களுக்கு இடமளித்து தங்களின் உயரிய பன்பினை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார்கள்
உலகில் இன, மத மொழிகளை அடிப்படையாக கொண்டு பிரிவினை வாதங்கள் தாங்கள் வாழும் சமூகத்திற்குள் உற்புக செய்து அதில் அரசியல் அல்லது சுயநல இலாபமடையும் சமூகங்கள் இவ்வாறு பன்புடன் நடந்து கொள்ளும் இலண்டன் மில்டன் கீன்ஸ் மாநகரில் வசிக்கும் வெள்ளையர்களிடமிருந்தாவது கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருக்கின்றது என்பது புலனானது.
அல்ஹம்துலில்லாஹ் !!
அதனால்தான் என்னவோ நமது மூதாதையர்கள் ' வெள்ளக் காரனைப் போல்; வெள்ளக் காரனைப் போல்;
என்று அவர்களை அழைப்பதுண்டோ ! என எண்ணத்தோன்றுகின்றது. எனது மனதில் பதிந்துள்ளவற்றினை வெளிப்படுத்தினார் கூரித்த தேவாலாலையத்தில் நோன்பினை துறந்து அதில் தொழுகையிலும் கலந்து கொண்ட அனுபவத்தினை பெற்ற அப்துர் ரஷாக்… வெள்ள வெள்ளதான்,,!
Post a Comment