எம்.ஜே.எம.சஜீத்
நமது நாட்டில் அனர்த்தங்கள் நிகழும் போது பல்லின மக்களும் இனபேதமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை எல்லோரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ள பல வரலாறுகள் உள்ளது என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு (2) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
அனர்த்தங்கள் ஏற்படும் போதுதான் மனித நேயமுள்ளவர்களை நாம் அடையாளம்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அன்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நாம் எல்லோரும் முன்வரவேண்டும். அன்மையில் நமது நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண் சரிவு போன்ற அனர்த்தங்களினால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 96 பேர் காணாமல்போயுள்ளனர்.
இதில் பாடசாலை மாணவர்கள் 44 பேர் அடங்குகின்றனர். 1,17,150 பேர் முகாம்களில் தங்கி வாழ்கின்றனர். முழுமையாகவும், பகுதியாகவும் 8000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாரிய பொருளாதார அழிவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இறைவனுடைய சக்தியினால்தான் உலகத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இந்த உலகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என இறைவனால் தீர்மானிக்கப்படுகின்ற விடயங்களே உலகில் நடந்த வண்ணம் உள்ளது.
இறைவனுடைய சக்தியினால்தான் உலகத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இந்த உலகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என இறைவனால் தீர்மானிக்கப்படுகின்ற விடயங்களே உலகில் நடந்த வண்ணம் உள்ளது.
நமது நாட்டில் இனவாத நடவடிக்ககைகளால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிப்படைந்த நிலையில்தான், மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. பல்லினமக்கள் வாழும் நமது நாட்டில் எல்லோரும் இன ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதனையும் இவ் அனர்த்த நிகழ்வுகள் எமக்கு உணர்த்தியுள்ளது.
எனவே, கிழக்கு மாகாண சபை நிதிகளை வழங்குவதைவிடவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒருபகுதியை தெரிவு செய்து அப்பிரதேச மக்களுக்கான சுகாதார, நீர்வழங்கள் வசதிகள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குதல் போன்றவற்றிற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபை சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் 37 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று ஆறுதல் கூறுவதுடன் அம்மக்களுக்களின் அத்தியவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இச்செயற்பாடுகளினால்தான் நமது நாட்டில் நல்லிணக்கங்களை ஏற்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளில் கிழக்கு மாகாண சபை முன் உதாரணமாக செயற்ப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இறுதிக் கட்டத்தில் உள்ள போதிலும், அனர்த்தங்கள் ஏற்படும் போது அவசர உதவிகளை வழங்குவதற்கான விசேட அனர்த்த நிதியம் ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment