Top News

இனவாத செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றன



நாட்டில் தலை தூக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியைஏற்படுத்தி வருவதாக கிழக்கி முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

இலங்கை சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளுடன் நல்லெண்ணத்தை வளர்த்து வருகையில்இவ்வாறான இனவாத சம்பவங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தஅரசாங்கம் முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதாக கிழக்கு முதலமைச்சர்சுட்டிக்காட்டினார்.

பிலிப்க்ஸேகோர்ஸெவ்கி(filipgrzegorzewski) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும்கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்றது,

இதன் போது  சிறுபானமையினர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கிழக்கு மாகாணமக்கள் எதிரநோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த  சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த  கிழக்கு  முதல்வர்,
சிறுபான்மையினர் ,அவர்களது மதஸ்தலங்கள் மற்றும் உடமைகள் மீதானவன்முறைச் சம்பவங்கள்குறித்து  நாம் மிகத்  தெ ளிவாக  எடுத்தரைத்திருநதோம்.

இவ்வாறான  சம்பவங்கள்  யுத்த்திற்கு பின்னர்  கட்டியெழுப்ப்ப்பட்டு வரும்   இலங்கைபோன்ற நாடுகளுக்கு ஆரோக்கியமானதல்ல என  ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போதுஎமக்குதெரிவித்தனர்.

அத்துடள் யுத்தம் முடிந்து  ஆண்டுகள் பல கடந்த போதிலும் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டமாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாண மக்களின் பலவேறு பிரச்சனைகள்தொடர்ந்துகொண்டேயிருப்பதை நாம் சுட்டிக்காட்டினோம்.

நாட்டில்   இயல்பு நிலை தொடர்ந்த போதிலும் இதுவரைபொதுமக்களின் குடியிருப்புக்காணிகள் மற்றும்விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாதுள்ள அவல நிலையை சுட்டிக்காட்டினோம்.

காணிகளை விடுவிப்பதுதொடர்பில்  கடந்த  அரசாங்கத்தை  விட இந்த அரசாங்கம் கரிசனை  காட்டிய போதிலும்  அதற்கான நடவடிக்கைகள் மக்களிடையே  பெருமளவு திருப்தியை  ஏற்படுத்தக் கூடியதாய்அமையவில்லை என குறிப்பிட்டோம்.

அது மாத்திரமன்றி தொலபொருள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்ற போரவையில்சிறுபான்மையினரின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்தும் நாம் சுட்டிக்காட்டனோம்.

யுத்த்த்தின்போது    மற்றும் அதன் பின்னரான  காலப்பகுதியில்  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடந்த அரசாங்கமோ இந்த  அரசாங்கமோ  இதுவரை அவர்கள்தொடர்பில்  ஏற்றுக்கொள்ளக் கூடியதீர்வொன்றினை  முன்வைக்கவில்லை.

எனவே இன்றும் அவர்களது  உறவினர்கள் வடக்கு கிழக்கில்  தமக்கான தீர்வுகோரி போராடிவருகின்றனர் அதனையும் நாம் அவர்களின் கவனத்திற்கு  கொண்டு வந்தோம்.

கிழக்கில்  யுத்த்தால்  விதவைகளாக்கப்பட்டபெண்கள்  தலைமை  தாங்கும் குடும்பங்கள்   வாழ்வாதாரஉதவிகளின் பாரிய  சிரமங்களுக்கு மத்தியில் தமது  வாழ்வினை  கொண்டு செல்கின்றனர்  எனவே அவர்களுடைய  வாழ்வாதாரத்தினை  உயர்த்துவதற்கான திட்டங்களை  முன்னெடுக்க ஐரோப்பியநாடுகள் முன்வரவேண்டும் எனகோரியிருந்தோம்.

அத்துடன் எமது  மாகாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை  பாரியதொரு பிரச்சினையாகஅமைந்துள்ளதுடன்  புதிய தொழில்வாய்ப்புக்களை  வழங்கும் தொழிற்துறைகளை  உருவாக்க உதவவேண்டும் எனவும்  நாம் கோரியிருநதோம்.

அது மாத்திரமன்றி சிறுபான்மையினர்  மீதான அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் தீரவொன்று  விரைவில்  முன்வைக்கப்படவேண்டிய  தேவையும்  சிறுபான்மையினருக்குஎவ்வித பாதிப்பையும்  ஏற்படுத்தாத வகையிலான தீரவொன்று அவசியம் எனவும் நாம் கூறியிருநதோம்என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post