பாறுக் ஷிஹான்
பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலகம், யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மற்றும் யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு தொடர்பான பொதுக் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று(8) மாலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹொட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக ஊடகத் துறை இணைப்பாளர் கலாநிதி இ.இரகுராம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கு.குருபரன், இலங்கை ஊடகக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தீபாஞ்சலி அபேவர்த்தன, கொழும்பு பல்கலைக் கழக ஊடகத்துறைத் தலைவர் கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சி.தவராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உட்பட அரசியல் பிரமுகர்களும், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், ஊடகவியலாளர்கள், ஊடக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment