Top News

முஸ்லிம் எம்பிக்களை ஒரே குடையின் கீழ் வருமாறு மரிக்கார் எம்.பி அறிவுறுத்து



(அஷ்ரப் ஏ சமத்)

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து  அரசாங்கத்துக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டும்.  என பா. உ. எஸ்.எம் மரிக்காா்  அனைத்து முஸ்லீம் பா. உறுப்பிணா்களிடமும்  வேண்டுகோள் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளாா். 


வெள்ள அனா்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நேற்று(5) மெகட கொலநாவை ரஹ்மானியா ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவா் கலந்து கொண்டபோது ஞானசார தேரா்  இதுவரை  ஏன் அரசாங்கம் கைது செய்யாமாலும் இருப்பது பற்றி முஸ்லீம்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோதே  அதற்கு பதிலளித்து  கருத்து வெளியிட்டபோதே அவா் மேற்கண்டவாறு குறிப்பிட்டாா். 

இந்த நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ்  புலனாய்வு பிரிவுக்கு  ஞானசார தேரரை கண்டு கொள்ளமுடியாமல் இருப்பது  இந்த நுாற்றாண்டின் ஒரு  பெரிய நகைச்சுவையாகும். 

தற்பொழுது நடப்பவைகள் பாா்க்கும்போது  இந்த விடயத்தில் நீதித்துறையினரும், பொலிசாரும் நடந்து கொள்ளும்  விதம் இந்த கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஒரு சக்தி ஞானசார தேரரை கைது செய்ய விடாமல் தடுப்பதையும் அவரை பாதுகாப்பது தொடா்பாக எமக்கு பறை சாற்றுகிறது.  நாம் ஏற்கனவே  ஞானசார தேரா் விடயத்தில் அரசாங்கத்தின் உயா்மட்டத்தில் சந்தித்து  தணிப்பட்ட ரீதியிலும்  கூட்டாகவும் அளுத்தம் கொடுத்து வந்துள்ளோம்..  
இந்த விடயம் தொடா்பாக நாம் உடனடியாக இறுதித் தீா்மானம் ஒன்றுக் வரவேண்டும். எமது தீா்மானத்தினை அரசாங்கம் செவி சாய்க்காத வரை எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல முஸ்லீம் நடாளுமன்ற உறுப்பிணா்கள் அனைவரும் எதிா்வரும் பாராளுமன்ற கூட்ட அமா்வுகளில் புறக்கணிப்பதற்கு தீர்மானம் ஒன்றுக்கு வரல் வேண்டும். என அவா் குறிபிட்டுள்ளா். 

Post a Comment

Previous Post Next Post