Top News

முஸ்லிம்களின் கடைகளை எரிப்பதாக எண்ணி நாட்டின் வருமானத்தை சூறையாடுகிறார்கள்


இலங்கையில் முஸ்லிங்களின் பொருளாதாரத்தினை அளிப்பதாக நினைத்துக்கொண்டு நாட்டின் பொருளாரத்தினை நலினப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்
இலங்கையில் முஸ்லிங்களின் பொருளாதாரத்தினை அளிப்பதாக நினைத்துக்கொண்டு சிங்கள இனவாதிகளும் மதவாதிகளும் சொந்த நாட்டின் பொருளாரத்தினை 
நலினப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அதன் பின் விளைவுகளை சற்றும் சிந்திக்காத இலங்கை அரசு கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறது.

நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளால் பல அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன அதிலும் குறிப்பாக முஸ்லிங்களின் கடைகளை எரித்து நாசப்படுத்துவதனால் முஸ்லிங்களின் பொருளாதாரங்களை முடக்கி முஸ்லிங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றார்கள் அனால் அவர்கள் அழிப்பது அவர்களின் சொந்த வருமானத்தினையும் முழு நாட்டின் பொருளாதாரத்தினையும் என்பதனை சிந்திக்கத்தெரியாத மூடர்களாக செயற்படுகின்றார்கள்.

முலின்கள் பல வர்த்தக நிலையங்களை உருவாக்கினாலும் அதில் அதிகம் வேலை செய்பவர்கள் சிங்கள சகோதரர்க அதுமட்டுமல்லாமல் முஸ்லிங்களின் வர்த்தக நிலையங்களால் வருசத்துக்கு பல மில்லியன் வருமான வரி கட்டப்படுகின்றன இதையெல்லாம் சிந்திக்க தெரியாதவர்களாக நடந்துகொள்கிறார்கள்.

ஹலால் ஹராம் பிரச்சினை வந்ததிலிருந்து பல மில்லியன் ரூபாய் வருமானத்தினை வெளிநாட்டு உள்நாட்டு விற்பனையிலிருந்து இந்த நாடு இழந்துள்ளது.
LTTE பயங்கரவாதம் இருந்தபோது   இந்த நாட்டில் நாட்டின் பாதுகாப்புக்காக அமெரிக்காவையும் விட அதிக பணத்தினை செலவிடுகிறோம் பயங்கரவாதம் மட்டும் இல்லாவிட்டால் இந்த நாட்டினை சிங்கப்பூராக மாற்றியிருப்போம் என்று சொன்னார்கள் ஆனால் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து 8 வருடங்களாகின்றன நாடு எந்த வளர்ச்சியும் காணவில்லை மாறாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒருநாடு பொருளாதாரத்தில்  வளர்ச்சியடைவதற்கு உள்நாட்டில் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்திகளும் சேவைகளும் (GDP ) முக்கியமானதொன்றாகும் அதற்க்கு நம் நாட்டில் முஸ்லிம்கள்  அதிக பங்களிப்பினை செய்து வருகின்றார்கள் ஆனால் அதையெல்லாம் சிங்கள தீவிரவாத சக்திகள் அளித்துக்கொண்டிருக்கின்றார்கள் அதன் பின்விளைவு தெரியாமல் அரசாங்கமும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
இதுபோன்ற பல கண்மூடித்தனமான செயற்பாட்டினால் நம் நாட்டில் தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து நாட்டின் பொருளாதாரம்  குறைந்தது 25 % ஆல் அதிகரித்திரிக்கவேண்டும் மாறாக நாட்டுக்கு கிடைக்கும் மொத்த வருமானத்தைவிட 30 % ஆல் செலவு அதிகரித்துள்ளது இந்த செலவு அதிகமாக வெளிநாட்டு வங்கிகளுக்கும் வெளிநாட்டு அரசாங்கத்துக்கும் வட்டிப்பணமாகவும் உள்நாட்டுக்குள் வருமானமின்றிய செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டில் கிடைக்கும் வருமானத்தில் 75 % இற்கும் மேற்பட்ட பணத்தினை வெளிநாட்டு கடன்களை அடைக்க பயன்படுத்துகிறார்கள் உள்நாட்டினை வழிநடத்த இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிதியுதவியும் கடனும் பட்டு திரிகிறார்கள்.

மேலும் ஒரு தனிநபர்/குடும்ப வருமானத்தைவிட (GDPPC ) செலவு (PPP) அதிகமாக உள்ள நிலைமையினை இந்த அரசாங்கம் கண்டுகொள்வதில்லை பண வீக்கமும் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றன அது இன்று குறைந்தது 8 % எட்டிப்பிடித்துள்ளது.

சிங்கள இனவாதிகளும் மதவாதிகளும் முஸ்லிங்களில் இருக்கும் வெறுப்புக்காரணமாகவும் முஸ்லிங்களின் வளர்ச்சியில் இருக்கும் பொறாமை காரணமாகவும் முஸ்லிங்களை அழிக்கத்துடிக்கிறார்கள் அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து பணத்தினை வட்டிக்கு கடனாக  பெற்றுக்கொள்ளும் போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு அதிகளவு பணத்தினை நன்கொடையாகவே வழங்குகின்றன அந்த பணம் அதிகமாக 75 % சிங்களவர்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்தினால் கிடைக்கும் பணத்தில் 90 % ஆன வருமானம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே கிடைக்கின்றன எத்தனையோ சிங்கள குடும்பங்கள் முஸ்லிம் நாடுகளால்தான் வாழுகிறார்கள் அப்படி இருந்தும் நன்றிகெட்ட சிங்கள இனவாத வெறியர்கள் முஸ்லிங்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம்களையும் அழிக்கத்துடிக்கிறார்கள் அதனை இந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

இன்று இரவும் ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான தேயிலை உற்பத்தி நிலையம் சிங்கள மத வெறியர்களால் எரிக்கப்பட்டுள்ளன இந்த நிலை நீடிக்குமானால் முஸ்லிம்களின்  பொருளாதாரம் அழிந்துவிடும் என்பதைவிட முழு நாட்டின் பொருளாதார நிலைமை  Kongo நாட்டின் நிலமையைவிட மிகமோசமான நிலைமைக்கு வந்து சேரும்.

நமது நாட்டில் ஒரு தேசத்தில் 2 பேர் முஸ்லிம் தேசியத்தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு 19 பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  மொத்தம் 21 பேர் இருந்தும் படித்தவர்கள் என்று தங்களை இனம் காட்டிக்கொண்டு நாட்டின் வளர்ச்சியில் இந்த சிங்கள பேரினவாதிகளின் தீய செயல்களால் என்ன பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது     என்பதை இந்த அறிவுகெட்ட அரசாங்கத்துக்கு எடுத்து சொல்லுவதுமில்லை சமுதாயத்துக்காக எந்தவித தூரநோக்குடனும் செயற்படுவதுமில்லை தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதுமில்லை.

இந்த நாட்டில் முஸ்லிங்களுக்கு நடக்கும் அநியாயங்களை கட்டுப்படுத்துவதற்கும்  இதுவரைக்கும் ஏற்பட்டிருக்கும் காயங்களை ஆத்துவதற்கும் ரணில் MY3 மஹிந்த எனும் சீலையை மாத்தி மாத்தி கட்டி பிரயோசனமில்லை சரியான மருந்து கட்டவேண்டும் அதற்க்கு இதுவே தருணம். எல்லா முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்களும் எம்பிக்களும் ஒன்றுசேர வேண்டும் பிரச்சினைகள் இனி வெளிநாடுகளில் பேசப்படவேண்டும். மேலே குறிப்பிட்டிருக்கும் நாட்டின் இன்றய பொருளாதார சிக்கல் நிலையை படித்தவர்கள் ஒருபடி மேல் சிந்தியுங்கள் நமது பிரச்சினை வெளிநாட்டு அரசாங்கம்களுக்கு சரியானமுறையில் போகுமாக இருந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு இன்றைக்கிருக்கும்  பொருளாதார சிக்கல்களுக்கு  பிச்சை வேணாம் நாயைப்புடி என்ற நிலைமைதான். நாட்டில் 10 % வாழும் நம்மைவிட 75 % வாழும் சிங்களவர்களுக்கே அதிகம் பாதிப்பு அதற்கப்புறம் முஸ்லிம்களை சீண்டுவதை தானாக அவர்களே நிப்பாட்ட நேரிடும் வேறு வழியில்லாமல்.

நம் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரைக்கும் தங்கள் பக்கட்டுகளை நிரப்பியது  போதும் இனியாவது நம் சமூகத்துக்காக சிந்தியுங்கள் பணம் அதிகம் சேரச்சேர அப்புறம் அந்த பணத்தினை எங்கே பதுக்குவது என்பதில் மூளையை குடஞ்சி சிந்திச்சி பணத்தினை எங்கயாவது பதிக்கிவச்சிட்டு வெளிய வருவதற்குள் வோட்டுப்போட்ட  எல்கா சனங்களும் மாண்டுபோகும்.
நோன்புவந்தால் மார்க்கம்பேசும் அரசியல்வாதிகள் பாவமன்னிப்பு தேடும் மாசத்தில் சமூகத்துக்காக எல்லோரும் ஓன்றுசேராமல் தனித்தனியே சாறு புழிவதும் நோன்பு முடிந்ததும் அடுத்த 11 மாசத்துக்கு சமூகத்தின் சாபத்தினை தேடுவதுமான அரசியலை தொடர்ந்தும் செய்யாமல் இன்றே ஓன்று பட்டு எல்லா பிரச்சினைக்கும் முடிவுகட்ட முயற்சி செய்யுங்கள் மனச்சாட்சியுள்ளவர்களாக.

கட்டுரையாளர் :
சம்சுதீன் யூனிஸ்லெப்பை 

பகிர்வு :
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Post a Comment

Previous Post Next Post