கலாநிதி அறூஸ் நளீமியால் உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு

NEWS
0


(எம்.எம்.ஜபீர்)

காத்தான்குடி அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பு நோன்பை முன்னிட்டு உலர் உணவு வழங்கும் நிகழ்வு காத்தான்குடி அல்-அஷ்ரப் பாலர் பாடசாலையில் அமைப்பின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. 

வசதி குறைந்தவர்களுக்கு நோன்பு  நோற்பதற்காக வேண்டி காத்தான்குடியைச் சேர்ந்தவரும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிப்பவருமான கலாநிதி அஷ்ஷேக் அறூஸ் சரீப்தீன் (நளீமி) உலர் உணவு வழங்குவதற்கான அனுசரணயை வழங்கியமை விசேட அம்சமாகும்.

கலாநிதி அறூஸ் நோன்பு காலத்தில் மாத்திரம் அல்ல எழை ,வறிய மக்களுக்கு தனது உதவிகளை வருடா வருடம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கிண்ணயாவில் அண்மையில்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்தனது உதவிகளை வழங்கியமை விசேட அம்சமாகும். கிண்ணியாவில் தன்னுடன் ஜாமியா நளீமியாவில் படித்த நண்பர்கள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த உதவிகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top