சிலோன் முஸ்லிம் வாசகரின் பேஸ்புக் பதிவு
எதேச்சையாக இன்று இரவு 08.30க்கு ரூபவாஹினியில் ஒளிபரப்பாகிய ஒரு சிங்கள குறும் நாடகத்தை பார்க்க நேர்ந்தது.
பன்சலையிலிருக்கும் மிகப் பழமைவாய்ந்த ஓலைச்சுவடியை திருடி தன்னிடம் கொடுத்தால் ஐம்பதாயிரம் தருவதாக அப்பாவியான போதிபாலவுக்கு ஆசைவார்த்தை கூறும் முஹமட் முதலாளியின் கபடத்தனத்தனத்தையும் திருடச்சென்ற போதிபால ஓலைச்சுவடியின் மகிமையை பன்சல ஹாமதுருவின் பன மூலம் விளக்கம் பெற்று தானும் துறவறம் பூணும் கதையே இது.
நாட்டில் தற்போது நிலவும் முஸ்லீம்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் நிறைந்த காலகட்டத்தில் ஒரு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகத்தில் முஸ்லீம்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை ஒளிபரப்புவது மிக வேதனையை தருகின்றது.
இனவாதமற்ற நல்லாட்சியாக இருக்குமென நாம் தெரிவு செய்த இந்த ஆட்சியில் நம்மக்களை வேதனை யடையச்செய்யும் இவ்வகையான தொலைக்காட்சி நகழ்ச்சிகளை இனிவரும் காலங்களிலாவது தவிர்ப்பார்களா?
Post a Comment