(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு - பெரிய ஆஸ்பத்திரியில் நோயாளருக்கு உதவியாளராக தங்கி இருக்கின்றவர்களுக்கு ஸஹர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிதா ஸ்தாபனத்தின் இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, இலவச ஸஹர் உணவு தேவைப்படும் உதவியாளர்கள் யாரும் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஸஹர் நேரத்தில் கடமை புரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு நிதா ஸ்தாபனத்தின் மூலமாக முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம். இஸட். அஹமத் முனவ்வர் பணிபுரியும் காலத்தில் ஸஹர் உணவு விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு -
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி ஊழியர் ஆப்தீன் 071 - 4468991
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி அப்துல் றஹ்மான் 075 - 5576610