Top News

வட கொரியா மீது பொருளாதார தடை!!



வட கொரியா சர்வதேச விதிமுறைகளை மீறியும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் 9 ஏவுகணைகளை சோதனை செய்தததை கண்டிக்கும் வகையில் ஐநா சபை புதிய பொருளாதார தடையை அதிரடியாக விதித்துள்ளது.

இதன்படி, வடகொரியாவின் அணு ஆயுத சோதனையுடன் நேரடியாக தொடர்புடைய 15 நபர்களுக்கு உலகளாவிய, பயண தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் அணு ஆயுத சோதனைக்கு உதவிய, 4 நிறுவனங்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, அமெரிக்காவின் ஐ.நா தூதர், நிக்கி ஹாலி, “ தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை பரிசோதித்து பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் அல்லது, அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள். வட கொரியாவுடன் அனைத்து நாடுகளும் தங்களது உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும்.” என கடுமையான தொனியில் பேசியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபை, வட கொரியாவிற்கு எதிராக 7 சுற்று பொருளாதார தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post