மாத்தறைக்குச் செல்லும் முஸ்லிம் காங்கிரஸின் நிவாரணப் பொருட்கள்

NEWS
0


(பிறவ்ஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனின் ஏற்பாட்டில் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் நாளை வெள்ளிக்கிழமை (02) அனுப்பிவைக்கப்படவுள்ளன.

ரமழான் காலத்தில் கொழும்பிலுள்ள விதவைகளுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப் பொருட்களே, இவ்வாறு அவசர நிமித்தம் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதன்பின்னர் விதவைகளுக்கான உலருணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு ரமழான் காலத்துக்குள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top