எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலமாக பிரதிநிதித்துவ அரசியலில் பிரவேசிப்பார் என்று சாட்டோ மன்சூர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார் .
வாழைச்சேனையில் செம்மனோடையை தளமாக கொண்டு செயற்பட்டு வருகின்ற சமூக சேவையாளரும், சரீப் அலி ஆசிரியர் அமைப்பின் தலைவருமான இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் பல கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மூலமாக வேட்பாளராக நிற்க விரும்புகின்றார் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகின்ற பட்சத்தில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் உறவுக்கான இணைப்பு பாலமாக செயற்படுவார் என்றும் கோரளைப்பற்று மத்தி பிரதேச சபையின் உருவாக்கத்துக்கு அர்ப்ப்ணிப்புடன் செயற்படுவார் என்றும் கூறினார்.
கோரளைப்பற்று மத்திக்கென பிரதேச செயலகம் 2002 ஆம் உருவாக்கப்பட்டு விட்டபோதிலும் பிரதேச சபை இன்னமும் உருவாக்கி கொடுக்கப்படாதது இப்பகுதி மக்களின் நியாயமான அரசியல் அபிலாசையை புறம் தள்ளுவதாக உள்ளது, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பான விவகாரத்தில் முஸ்லிம் – தமிழ் தலைமைகள் எடுக்கின்ற ஆரோக்கியமான முன்னெடுப்புகள், முயற்சிகள், முடிவுகள் கோரளைப்பற்று மத்தி பிரதேச சபையின் உருவாக்கத்துக்கு ஊக்கிகளாக அமையும் என்றும் சொன்னார்.
Post a Comment