ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
எவ்வாறு 1989ம் ஆண்டு, ஆண்டுகளில் மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதரையும் 2004ம் ஆண்டில் தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலியையும் மையப்படுத்தி கல்குடாவிற்கு ஒரு அரசியல் தலைமை வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த கல்குடா சமூகமும் முடிவெடுத்து வேட்பாளர்களாக களமிறக்கி அதில் வெற்றி கண்டதோ அதைப்போலவே நிகழ் காலத்தில் எமது கல்குடா அரசியலில் மக்களை மடையர்களாககி இடம் பெறுகின்ற குளறுபடிகளுக்கும், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்குகின்ற பொழுது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது கல்குடாவினை மையப்படுத்தி தொடர்ந்தேர்சியாக அரங்கேற்றுகின்ற சுயநல அரசியல் நாடகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து கல்குடாவின் எதிர்கால அரசியலினை கட்டி எழுப்புவதற்கான தேவைப்பட்டில் கல்குடா சமுகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையிலே தனது விடாமுயற்சியினால் சட்டத்தரனியாகி இன்று சகலரையும் மதிக்க கூடிய மார்க்க பற்றுள்ள பன்பாளர் என சமூகத்தில் பெயரெடுத்து மட்டுமல்லாமல் பல சமூக சிந்தனைகளை கையில் எடுத்து அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஓட்டமாவடியில் பிறந்து காவத்தமுனைக்கு வாழ்வு கொடுத்து வாழ்ந்து வரும் சட்டத்தரனியும் மாவட்ட பதில் நீதவானுமான ஹபீப் மொஹம்மட் றிபான் கல்குடாவில் பெயர் குறிப்பிட்டு கூறுமளவிற்கு சிறந்த மனிதர்கள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில் இறைவனின் அருளால் அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றார்.
ஆகவே அரசியல் தலைமை என்பவர்களின் ஏமாற்று வித்தைளுக்கும், அரசியலில் கல்குடா மக்களை இலகுவில் தொடர்ந்தேர்சியாக ஏமாற்றி விடலாம் என முடிவெடுத்து அதனை செயற்படுத்துவதில் வெற்றியும் கண்டு வரும் எஸ்.எல்.எம்.சியின் தலைமையின் சானக்கிய செயற்பாடுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் ஒட்டு மொத்த கல்குடா சமூகமும் ஒருமித்த குரலுடன் புதியதொரு எழுச்சியை நோக்கிய கல்குடாவின் அரசியல் பயணத்தில் மேற் கூறியவர்களை வலுக்கட்டாயப்படுத்தி கல்குடாவின் புதிய அரசியல் தலைமைத்துவம் எனும் அரசியல் அதிகாரத்தினை கையில் கொடுப்பதற்கு மிகத்தகுதியானவர்கள் என்பதில் கல்குடா மக்கள் தெளிவடைந்து சாதுரியமான முறையில் சமகாலத்தில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையினை எழுதுகின்றேன்.
இவர் வாழைச்சேனை மாவட்ட நீதி மன்றத்தில் சட்டத்தரனிகளாக கடமையாற்றியவர்கள். அந்த நேரத்திலே குற்றவாளிகளினுடைய தரப்பாக இருந்தாலும் சரி நிரபராதிகளினுடைய தரப்பாக இருந்தாலும் சரி நேர்மையான சட்டத்தரனிகள் என பெயரெடுத்தவர். அதில் முக்கியமாக சட்டத்தரனியாக கடமையாற்றிவரும் ஹபீப் மொஹம்மட் றிபான் சமூக சிந்தனையுடன் தனது சட்டத்தரனி எனும் தொழிலினை பயபக்த்தியுடன் சமூகத்திற்காக தூர நோக்கு சிந்தனையுடனா குறிக்கோளுடன் செய்து வருகின்றார். அவர் ஒரு சமூக சிந்தனையாளர் என்பதற்கு அண்மையில் அவர் காவத்த முனையில் இயங்கிவருகின்ற மேலதீக தேவைகள் உடையவர்களுக்கான பாடசாலையின் தலைமை பொறுப்பினை ஏற்று வழி நடாத்தி வருகின்றமையினை குறிப்பிடலாம்.
சட்டத்தரனிகளாகளாக வாழைச்சேனையில் இவர்கள் கடமையாற்றுகின்ற பொழுது கறைபடியாத கரங்களை கொண்டவர் என பிரதேச மக்களால் மட்டுமல்லாமல் மிக முக்கியமாக பாதிகப்பட்ட வழக்காட முடியாத சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பினை பெற்றவர்கள் என்பது முக்கிய விடயமாகும். அத்தோடு றிபான் தற்பொழுது சட்டதரனியாக செயற்படுவதினால் தொடர்ந்து அந்த பெயரினை தக்கவைத்திருக்கும் சட்டதரனியாக சமூகத்தில் தனது தொழிலினை முன்கொண்டு வருகின்றார். அத்தோடு இவர் சட்டத்தரனி என்ற வகையில் சமூகத்தின் பிரச்சனைளுடன் பின்னிப்பிணைந்துள்ள தொழிலை கறைபடியாத கரங்களை கொண்டு செயற்படுத்தியதினால் சமூகத்தின் மத்தியில் இருக்கும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக பூரண அறிவுடனும் அதற்கான நியாயமான அரசியல் ரீதியான தீர்வு திட்டங்களுடனும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவராகவே நான் இவரை பார்க்கின்றேன்.
மேலும் இவர் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ,காவத்தமுனை எனும் வரட்டு கெளரவத்துடனும், அற்ப அரசியல் சுயலாபங்களுக்காவும் எமது பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு தலைவிரித்தாடுகின்ற பிரதேசவாதங்களை கணக்கில் எடுக்காமலும் அதற்குள் விழுந்திடாமலும் செயலாற்ற கூடியவர். சகல ஊர் மக்களையும் ஒரே கூரையின் கீழ் இணைத்து கல்குடா எனும் ஒரே நாமத்தின் கீழ் கல்குடாவில் உள்ள அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டும் என சிந்திப்பவர்.
ஊர் துவேசத்தினை உடைத்தெறிய வேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக நாள்தோறும் சிந்திக்க கூடியவர். பிரதேசவாதத்தினை கையில் எடுத்து செயற்பட துடிக்கும் சுயலாப அரசியல் வாதிகளிடமிருந்து கல்குடா சமூகத்தினை எப்படி விடுதலை பெறச்செய்ய வேண்டும் என சமகாலத்தில் சிந்திக்க கூடிய தலைமைத்துவத்திற்கு தகுதியானவராகவே மரியாதக்குறிய பதில் மட்ட நீதவானும் சட்டத்தரனியுமான ஹபீப் றிபானை பார்க்கின்றேன்.
இவருடைய பாடசாலை காலம் தொடக்கம் இற்றை வரையான இவருடைய அடைவுகளில் எந்த அரசியல்வாதிகளுடைய சிபார்சுகளும் இல்லாமல் அல்லாஹ்வினுடைய உதவியினை முதன்மைபடுத்தி பெற்றுக்கோண்டவராகவே இருக்கின்றார். அதனோடு தாய் தந்தையின் ஆசீர்வாதங்களின் பின்னூட்டலுடன் சமூகம் மதித்து பேசக்கூடிய இடத்தினை சமூகத்தில் அடைந்து கொண்டவராவார்.
தொடர்சியாக எவருடைய சிபார்சுகளும் இல்லாமல் பல படிகளுக்கு தங்களுடைய கால்களை மேலும் முன்வைத்து இறைவனின் அருளால் கிடைத்த கெளரவத்தினையும் சமூகத்தில் தனக்கிருக்கும் இருக்கும் மதிப்பினையும் தக்கவைத்தவராக வாழ்ந்து இளம் தலை முறையினருக்கான எடுத்துக்காட்டுக்காட்டாக செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
இஸ்லாமிய சிந்தனைக்குள் தெளஹீத்திய வாதம், ஜமாத்தே இஸ்லாமியின் கிலாபத் எனும் கோட்பாடு ரீதியான இஸ்லாமிய முற்போக்கு சிந்தனை, தப்லீக்கின் இஸ்லாமிய சிந்தனைக்குள்ளான அழைப்பு போன்ற நிகழ்கால இஸ்லாமிய நடை முறைகளுக்குள் இவர்கள் இருவரும் சிந்தனை அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் பிரிவினையின்பால் தமது செயற்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளாமல் மார்க்கம் எனும் ரீதியில் குர் ஆன் ,ஹதீஸ் எனும் வாய்க்கால்களுக்கு நடுவே தடம்பிரலாமல் செல்லக்கூடிய நிதானம் நிறம்பிய மனிதராகவே நான் இவரை பார்க்கின்றேன்.
கல்குடாவிற்கான ஊர் துவேசமில்லாத, பக்கசார்பற்ற அரசியல் அதிகாரத்துடனான தலைமைக்கான வெற்றிடத்தினை நிறப்புவதற்காக மேற்கூறிய இருவரையும் அரசியல் கட்சிகள் சார்பாகவோ, அரசியல்வாதிகளின் சிபார்சுகளுக்கு அமைவாகவோ அல்லது அவர்களின் ஏகோபித்த பிரதி நிதிகளாகவோ கல்குடாவின் அரசியலில் கால்பதிக்க வைப்பதென்பது ஒரு பொழுதும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும்.
ஆகவே ஒட்டு மொத்த கல்குடா மக்களும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் செயற்படு வேலிட்கடிய அரசியல் கலாச்சாரத்தினை மீண்டும் கல்குடாவில் உருவாக்கி இவறை போன்றவர்களின் கைகளில் அரசியல் அதிகாரத்தினை வலுக்கட்டாயமாக கொடுத்து அதில் வெற்றியடைய வேண்டும் என்பதில்தான் கல்குடா மக்கள் சிந்தித்து செயலாற்றி தீர்க்கமான சிறந்த முடிவினை எடுக்க வேண்டியுள்ளது.
Whoever can contest.... but must not under SLMC untill SLMC current leader is changed... because... until he is there... nobody can do anything good to his society..but only can act like others do till now. So.. before justy the person... try to get the good patry first. Untill... would be cheated as long as we behind the SLMC. THIS IS EXPERIENCED TRUE HISTORY!
ReplyDeletePost a Comment