அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
உலகம் முழுவதும் அசிங்கப்பட்ட ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவின் மூலம் ஓவர் நைட்டில் உலக டிரண்டாகியுள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவின் மூலம் ஓவர் நைட்டில் உலக டிரண்டாகியுள்ளார்.
இணையத்தில் ‘covfefe’ வார்த்தை பயங்கர வைரலாகியுள்ளது. இந்த வார்த்தை இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த வார்த்தையை உருவாக்கியவர் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்.
மே 31ம் திகதி அதிகாலை 5.06 மணிக்கு, Despite the constant negative press covfefe என ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ‘covfefe’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அனைவரும் கூகுளின் உதவியை நாடியுள்ளனர், பலரும் தேட ஒரே டுவிட்டில் டிரெண்டாகியுள்ளார் ட்ரம்ப்.
குடிபோதையில் அந்த டுவிட்டை பதிவிட்டிருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, தூக்கத்தில் அல்லது ரஷிய மொழியில் பதிவிட்டு இருப்பார் என விமர்சித்துள்ளனர்.
Despite The Constant Negative Press Coverage என்ற வார்த்தைக்கு பதில் தவறாக ‘covfefe’ என ட்ரம்ப் பதிவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த டுவிட் ட்ரம்ப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது
Post a Comment