Top News

இறக்காமம் முஹைதீன் ஜபல் கிராமங்களுக்கு இலவச குடிநீர் வழங்கியதற்காக எவ்விதமான பணமும் அறவிடப்படவில்லை.



இறக்காமம் முஹைதீன் கிராமம் - ஜபல் கிராமம் என்பனவற்றிக்கு கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னதாக இலவசமாக வழங்கப்பட்ட குடிநீர் சம்பந்தமாக ஒரு சில இணையத்தளங்களில் எதிர்க்கட்சிக்காரர்கள் அரசியல் இலாபங்களுக்காக பயனாளிகளிடம் இருந்து எஸ்.எல்.எம்.சி யின் மத்திய குழு இப்தார் நிகழ்வை நடத்துவற்காக சுமார் 1500 ருபா வீதம் 80 வறிய குடும்பங்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் பணம் கொடுக்காதவர்களிடம் இலவச குடிநீர் வழங்கப்பட மாட்டாது என்றும் ஊடகங்களில் அறிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இறக்காமம் மத்திய குழுவினரை எமது விஷேட செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் நேரடியாகச் சென்று தொடர்பு கொண்ட போது இறக்காமம் மத்திய குழு தெரிவிக்கையில்,

முஹைதீன், ஜபல் கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட குடிநீர் விநியோகம் தொடர்பாக முழுமையாக அதனை இறக்காம் எஸ்.எல்.எம்.சி யின் மத்திய குழுவும் கட்சியின் ஆதரவாளர்களும் இணைந்தே இதனை மேற்கொண்டார்கள். ஆனால் இதற்காக ஒரு சதமேனும் பணம் எங்களால் அறவிடப்படவில்லை என்பதை நற்கூலி பெறும் இந்த நல்ல மாதத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் இதனைத் திறன்பட செய்வதற்கு உரிய மக்களிடம் இருந்து அதாவது 80 குடும்பங்களும் இலவச நீர் கிடைத்தமைக்கு அதனை மகிழ்வுறும் நிலைகொண்டு வருகின்ற அதிதிகளை இன்முகங்கொண்டு வரவேற்பு வழங்குவதில் சிறப்பாக செயற்படுத்துவதற்கு அவர்கள் மேற்கூறிய இரண்டு கிராம மக்களுமே முழுப்பொறுப்புடையவர்கள்.

இவை தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்குவோருக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக. என்று எஸ்.எல்.எம்.சி யின் மத்திய குழு பகிரங்கமாக தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு - இறக்காமம்

(எஸ்.எம். சன்சீர் விஷேட செய்தியாளர் - இறக்காமம்)

Post a Comment

Previous Post Next Post