Top News

அனர்த்தத்தால் பாதிக்கபெற்ற மக்களுக்காக கிழக்கு மாகாண சபை விசேடமாக நாளை கூடுகிறது



Mohamed Anwer Mohamed Junaid

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மட்ட ஊழியர்கள் சேர்ந்து தமது சொந்த நிதியாக சுமார் 07 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காகவும், கிழக்கு மாகாண சபையின் நிருவனங்களுடாக அம்மக்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சேவைகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதற்காகவும், நாளை (01.06.2017, வெள்ளிக்கிழமை) விசேட சபை அமர்வொன்று இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில் "மக்கள் எதிர்பாராத இன்னல் ஒன்றை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் இழப்புக்களும் வலிகளும் எம்மை பெரிதும் பாதித்துள்ளது. சகல பாகுபாடுகளுக்கும் அப்பால் ஏக இறைவனிடம் மன்றாடி எம் மக்களின் இன்னலை தீர்க்க வழிவகை செய்ய அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டிய நேரம் இதுவே. அம்மக்களுக்கான நிவாரண முயற்ச்சியில் ஈடுபடும் அனைவரையும் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். 

இந்நிலையில், இன மத வேறுபாடற்று எம்மால் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியினையும், ஒரு சிலர் நேற்று என் காது கேட்க திருகோணமலையில் சபை செயலகத்திலேயே விமர்சித்தனர். மனிதர்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எப்போதும் உண்டுதான். ஆனால், எல்லாவற்றையும் விமர்சிக்கும் ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்லுவது. இந்த ஈனப்பிறவிகள் சமூக வலைத் தளங்களிலும் இன்று மலிந்து போய்விட்டனர் என்பது இன்னொரு புறம் கவலையாக இருக்கிறது.'' எனவும் கூறினார். 

Post a Comment

Previous Post Next Post