அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரி திருத்த சட்டத்தில் சகல மத ஸ்தானங்களுக்கும்கிடைக்கும் வருவாயில் 14% வீத வரி அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்பந்துல குனவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளை சந்தித்த அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2006 இல் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரி சட்ட திருத்தத்தில் சகல மதஸ்தானங்களுக்கும் எதுவித வரிகளும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் விரைவில்கொண்டுவர உள்ள உத்தேச் வரி சட்ட மூலத்தில் சகல மத ஸ்தானங்களுக்கும் கிடைக்கும் வருவாயில் 14% வீத வரிஅறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மகா நாயக்க தேரர்களிடம் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துலகுனவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் நிதி அமைச்சரினால் இந்த யோசனைஉள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment