கேப்பாபுலவில் இன்று 189 ஏக்கர் காணி விடுவிப்பு - மீள்குடியேற்றத்துறை அமைச்சு

NEWS
0


முல்லைத்தீவு - கேப்பாபுலவில் 189 ஏக்கர் காணி பரப்பு இன்றைய தினம் விடுவிக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த காணியில் உள்ள முகாம்களை அகற்றுவதற்காக 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இதேவேளை, அங்குள்ள கடற்படை முகாம் வேறு இடத்தில் நிறுவப்படும் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 279 ஏக்கர் காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், எஞ்சியுள்ள தமது காணிகளையும் விடுவிக்குமாறு கோரி, கேப்பாபுலவு மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top