ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடை பெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் குறித்து விளக்கினார்.
தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.
‘‘பாகிஸ்தானில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்து கடுமையாக தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன. அதை ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.
பிரதமர் மோடி தனது உரையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர்புதின், சீன அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோர் முன்னிலையில் பேசினார். அதை அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர். மேலும் 11 அம்ச ஆலோசனைகள் அடங்கிய குறிப்பை ஜி20 நாடுகளின் தலைவர்களிடம் வழங்கினார். அதில் தீவிரவாத குழுக்கள் குறித்தும், அவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் நாடுகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.
ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் ஜெர்மன் மொழியில் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தனர். அதை அனைத்து இன்டர்நெட் செய்தி நிறுவனங்களும் போட்டி போட்டு வீடியோவுடன் வெளியிட்டன.
புதின் கடந்த 1985 முதல் 1990-ம் ஆண்டுவரை கிழக்கு ஜெர்மனியில் தங்கியிருந்தார். அதனால் அவருக்கு ஜெர்மன் மொழி பேச தெரியும்.
மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், கலந்து கொண்ட நிலையில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ரஷிய அதிபர் புதினுக்கும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் ஊடகங்கள் முன்னுரிமை அளித்தன.
Post a Comment