அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
தூதரக உறவுக்கான தடையை நீக்க கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் 48மணி நேரம் ‘கெடு’ விதித்துள்ளன.
அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன, இதை காத்தார் மறுத்துள்ளது.
கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து மத்தியஸ்தம் செய்து வருகிறது குவைத். மத்தியஸ்தம் செய்யும் குவைத் மூலம் வளைகுடா நாடுகள் கத்தார் நாட்டுக்கு கடந்த 22-ந் தேதி 13 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் ஒன்றை கொடுத்து உள்ளது.
13 நிபந்தனைகள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது.ஈரானுடன் ஆன தூதரக உறவை குறைக்க வேண்டும், போன்றவை அடங்கும்.
இந்த நிலையில், நேற்றுடன் ‘கெடு’ முடிந்தது. எனவே அதை நீடிக்கும் படி குவைத் அரசு சவுதி அரேபியாவிடம் வலியுறுத்தி இருந்தது. அதை பரிசீலித்த சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கத்தாருக்கு விதிக்கப்பட்ட ‘கெடு’வை மேலும் 48 மணி நேரம் நீடித்து அறிவித்துள்ளது
Post a Comment