தென்னாப்பிரிக்காவில் உள்ள குருகர் என்ற இடத்தில் 12 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காடு உள்ளது. இங்கு சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.
சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் அங்கு வசிக்கின்றன. இவற்றில் 4 ஆண் சிங்கங்கள் காட்டில் இருந்து தப்பி ஊர் பகுதிக்குள் புகுந்து விட்டன. அவை மல்சாலு என்ற கிராமத்தில் நடமாடியதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் மக்கள் உயிருக்கு பயந்து வெளியே நடமாடாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அந்த சிங்கங்களை பிடிப்பதற்கு வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதே போன்று 5 சிங்கங்கள் காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் வந்துவிட்டன. அவற்றில் 4 சிங்கங்களை பிடித்து சென்றுவிட்டனர். ஒரு சிங்கம் இன்னும் பிடிபடவில்லை.
Post a Comment