இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக 77 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக 220 பேர் வரை மரணித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.