Top News

பங்களாதேஷ்: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 9 பேர் பலி



பங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. ஆடை ஏற்றுமதியில்  சீனாவிற்க்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக தொழிலாளர்களை வங்காளதேசம் கொண்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% லாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்று தருகின்றன.

இந்நிலையில், டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உடல் கருகி பலி ஆகினர். இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post