அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற சார்லஸ் லியீஸ்ஸி என்ற வீரர், 97 வயது ஆகும் நிலையில் தான் படித்த பள்ளியிலிருந்து பட்டத்தை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள தெற்கு பிலாடெல்பியா நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் லியீஸ்ஸி. தற்போது 97 வயதாகும் சார்லஸ் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கேற்றார்.
போரில் பங்கேற்று பதக்கங்களையெல்லாம் பெற்ற பின்னர், ஓய்வுக்காலத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சார்லஸ்க்கு விட்டுப்போன படிப்பின் பட்டத்தை பெற வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டுள்ளது. தனது ஆசையை குடும்பத்தினரிடம் அவர் சொல்ல, அவரது குடும்பத்தினர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த பிலாடெல்பியா மாவட்ட பள்ளி நிர்வாகம், மகிழ்ச்சியுடன் சார்லஸின் ஆசையை நிறைவேற்றியுள்ளது. 2017-ம் ஆண்டில் பட்டம் பெரும் மாணவர்களுடன் சார்லஸ்க்கு பள்ளி பட்டம் வழங்கியுள்ளது. தன் குடும்பத்தினரின் முயற்சியே இதற்கு காரணம் என்று ஹேப்பியாக பேட்டி தட்டியுள்ளார் அந்த 97 வயது பட்டதாரி.
Post a Comment