Top News

சிறு தவறு நேர்ந்தாலும் அணு ஆயுதப் போர் மூளும்!



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சிறு தவறு நேர்ந்தாலும் அணு ஆயுதப் போர் மூளும்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
வடகொரியா எல்லைப்பகுதியில் தென்கொரியா மற்றும் அமெரிக்க விமானப்படையினர் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு வடகொரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பி1 பி லாஞ்சர்ஸ் ரகப்போர் விமானங்கள் 900 கிலோ எடை அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்டது. இவ்வகை விமானங்கள் வடகொரியா எல்லையில் தாழ்வாகப் பறந்து எச்சரிக்கை விடுத்தன.

இந்நிலையில் அமெரிக்காவின் இச்செயலுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, வடகொரிய அரசுக்கு தொடர்பான ரோடாங் நாளிதழில் “வெடிமருந்து பீப்பாய்க்கருகே நெருப்போடு விளையாட வேண்டாம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
இந்தக் கட்டுரையில், “அமெரிக்காவின் இந்த போர் ஓத்திகை கொரிய தீபகற்பப் பகுதியை அணு ஆயுதப் போர் முனையாக மாற்ற வேண்டாம். இந்த அபாயகரமான ஆட்டத்தை போர்விரும்பிகள் செய்துள்ளனர். இது அணு ஆயுதப்போருக்கே வித்திடும்.
ஒரு சிறு தவறான கணிப்போ அல்லது சிறு தவறோ நிகழ்ந்தால் அது அணு ஆயுதப் போரின் துவக்கமாகவும் இன்னொரு உலகப்போரையும் ஏற்படுத்தி விடுவதாகவும் அமைந்து விடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

Post a Comment

Previous Post Next Post