கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
குறிப்பாக கல்வித் துறையினை எடுத்துக்கொண்டால் சொல்வதற்கென்று ஒரு வைத்தியர், ஒரு பொறியியலாளர் , ஒரு கணக்காளர் என்று இல்லாமல் இருந்த எமது பாலமுனைக் கிராமத்தில் தற்போது எண்ணிக் காண்பிக்க கூடிய அளவிலான வைத்தியர்கள் , பொறியிலாளர்கள் , கணக்காளர் , சட்டத்தரணிகள் , கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் , விரிவுரையாளர்கள், சிறந்த கல்விமான்கள் , பட்டதாரிகள் உருவாகி எமது கிராமத்தினை அழகுபடுத்தி இருக்கின்றார்கள்.
இதேபோன்று விளையாட்டுத் துறையிலும் சிறந்த விளையாட்டுக் கழகங்கள் ,சிறந்த விளையாட்டு வீரர்கள் , சாதனை படைத்த ஆசிரியர்கள் எமது கிராமத்தினை அடையாளப் படுத்தி இருக்கிறார்கள் மேலும் சமய கலாச்சாரத்திணை உற்றுநோக்கினால் பல்வேறு மௌலவிகள் , உலமாக்கள், ஹாபில்கள் , கலை இலக்கியவாதிகளை உருவாக்கி மேலும் உருவாக்கிக் கொண்டும் இருக்கின்ற ஒரு சிறந்த கிராமமாக இருக்கின்றது .
இவ்வாறு கல்வி, விளையாட்டு , சமய, கலாச்சார துறைகளில் அடையாளப் படுத்திக்கொண்ட எமது பாலமுனை கிராமத்திற்கு என்று ஒரு பிரதான பெயரப்பலகை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாயான விடயமாகும்.
எமது பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடையாளப் படுத்தக் கூடிய முறையில் பெயர் பலகை இருப்பது யாவரும் அறிந்த விடயமே.
எமது கிராமத்திற்கு மாத்திரம் ஏன் ஒரு பிரதான பெயர் பலகை வைப்பதற்கு முடியாமல் போய் இருக்கின்றது இதற்கு காரணம் "எல்லைப் பிரச்சினை" என்று கூருகின்றனர் இந்தப் பிரச்சினையை தீர்பதற்கு எமது கிராமத்தில் உள்ள எவரும் முன்வரவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
எனவே தான் இளைஞர் ஆகிய நாங்கள் இந்த பிரச்சினையை எமது எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்ல விடக் கூடாது எங்களால் முடியும் மாற்றத்தை ஏற்படுத்த "பாலமுனை" எனும் கிராமத்தினை அடையாளப்படுத்த..... ஒற்றுமையுடன் வெற்றி கொள்வோம் வருங்கள் இன்ஷா அல்லாஹ்
இஸ்ஸதீன் ஹம்தான்
Post a Comment