இலங்கையில் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகள் தேவாலயங்களுக்கு வழங்கப்படுவதாகவும் நிலை தொடருமாயின் பாரிய சவால்களுக்குள் இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கிக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்குள் ஆளான இளம் கர்ப்பிணி பெண்களும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டதாக வடமேல் மாகாணத்தில் இயங்கிவரும் அமைப்பு ஒன்று நேற்று எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தது.
தந்தைமாரால் பாலியல் ரீதியிலாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகள், கர்ப்பமாகிய இறுதிக்காலப்பகுதியில் நிர்க்கதியாக நிற்கும் நிலையில் ஜம்மியதுல் உலமா சபையிடம் ஒப்படைக்கபட எத்தனிக்கப் பட்டபோது அவர்களின் குறித்த சிறுமிகளை ஏற்றுக்கொள்ளவில்லை பின்னர் தேவாலய குழந்தைகள் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த மூன்று வருடங்களுக்குள் ஆறு பிள்ளைகள் ஒப்படைக்கபட்டதாக குறித்த அமைப்பு தெரிவித்தது.
நமது சமூகம் எங்கு செல்கிறது? என்ற கேள்வி எமக்குள் தோன்றுகிறது. இந்த பிரச்சினை மாத்திரமல்ல சிறுவயதில் திருமணமான பெண்கள் விதவைகளாக பிள்ளைகளுடன் வாழ வழியின்றி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
மாற்றத்தை உருவாக்குங்கள்
Post a Comment