சியாத் அகமட் லெப்பை
இலங்கையில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலை உருவாகி உள்ளது. யாழ்ப்பாணம்இ மன்னார்இ திருக்கோணமலைஇமட்டக்களப்புஇ அம்பாறை போன்ற மாவட்டங்கள்ளில் பருவ மழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதனால் பொத்துவில் பிரதேசத்தில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக குடிநீரின்றி பாதிக்கப் பட்டு வருகின்றனர் குறிப்பாக பொத்துவில் ஜெயிக்கா வீட்டுத்திட்டம்இ ஹிஜ்ரத் நகர்இ செங்கிராமம்இ கோமாரி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படையாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றமை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் அப்பிரதேச மக்களின் வாக்குகளை பெற்று அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டிருக்கும் அமைச்சர்கள்இ உட்பட நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவரகள் உட்பட நல்லாட்சி அரசுக்கும் பலமுறை நேரடியாகவும்இகடிதம்களாலும் பிரபல தொலைக்காட்சிஇ மற்றும் பத்திரிக்கை ஊடகங்கலினாலும் அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர் .
சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஈமது பிரச்சினையை கரித்தில்கொல்லாத நீர் வழங்கல் அமைச்சிக்கு மீண்டும் எமது பிரச்சினைகளை தெரிவிப்பதோடு அழுத்தம் தெரிவிக்கின்றனர் .
நாளாந்தம் கூலித்தொழில் செய்பவர்கள்இ கர்ப்பிணித் தாய்மார்கள்இ பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள்இ நோயாளிகள் இவ்வாறு குடிப்பதற்கும்இ குளிப்பதற்கும் நீரின்றி ஒவ்வொரு நாட்களும் குடிநீர் பிரச்ச்னைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இதனால் பாடசாலைக்குச செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பிரதேசசபையினால் பௌசர் மூலம் வழங்கப்பட்டு வரும் நீர் உரிய முறையில் விநியோகிக்கப்படாமையினாலும்இ வழங்கப்படும் நீர் இரண்டு கேன்களைக் கொண்டதாக ஐம்பத்தாறு லீட்டர் வழங்கப்பட்டு வருகின்றமையாலும் குறிப்பிட்ட அளவு நீரை வைத்து குடிப்பதா? குளிப்பதா? என்ற அவலநிலையில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து குளிப்பத்தற்கும் ஆடைகளை சுத்தம் செய்வதற்கும் போக்குவரத்துக்காக முட்சக்கரவண்டிக்கு ரூபா 400.00 செலுத்தி பொத்துவிலில் இருக்கும் தங்களது உறவினர்கள்இ நண்பர்கள்இ சொந்த்தக்காரர்களின் வீடுகள் என பல கிணறுகளை நோக்கி செல்கின்றனர். அதிலும் போக்குவரத்து பஸ் இன்றி போக்குவரத்துகளிலும் சிரமப்படும் மக்கள் இன்னும் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் அப்பகுதி மக்கள் முகமூடி அணிந்திக்கொண்டு போலி முகத்தோடு சீசனுக்கு சீசன் எம்மை பகடைக்காயாக நினைத்து எம் வாக்குரிமைகளை திருட வரும் அரசியல்வாதிகளையும் முழுமையாக வெறுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இனி வரும் கோடை காலங்களிலும் ஏனைய காலங்களிலும் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்கும்படியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் குறித்த அமைச்சுக்களிடமும் நல்லட்சி அரசிடமும் கேட்டுகொல்வதொடு கவலை தெரிவிக்கின்றனர்.
Post a Comment